காவல் நிலையத்தில் 49கைதிகள் பலி

காவல் நிலையத்தில் 49கைதிகள் பலி
Spread the love

காவல் நிலையத்தில் 49கைதிகள் பலி

காவல் நிலையத்தில் 49கைதிகள் பலி யாகியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனை தடுக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களில் இலங்கை காவல்துறை போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் 49 பேர் பலியாகி உள்ளதான புதிய செய்திகள் வெளியாகி இருக்கிறது.


காவல்துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள், வன்கொடுமையாக தாக்கப்பட்டு ,அதன் ஊடாகவே அதிகமான ஒரு பலியாகி உள்ளதான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

குற்றங்கள் என்ற அடிப்படையில் குற்றம் சுமத்தபட்டதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட, இவர்கள் மீது போலீசார் நடத்திய வன்கொடுமை தாக்குதல் ஊடாக, அப்பாவி கைதிகள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

காவல் நிலையங்கள் தடுத்து வைக்கப்பட்டு அதில் பலியான உறவுகள் மனித உரிமை ஆணையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட தகவல்களும் வெளியாகி உள்ளது.

இவ்வாறு இடம்பெறும் இந்த படுகொலைகள் இந்த மரணங்கள் என்பன தற்பொழுது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் இந்த விடயங்கள் வெளியில் கசிந்து விடாதபடி மூடி மறைக்கப்பட்டு ,இலங்கையினுடைய போலீஸ் அதிகாரங்கள் காப்பாற்றப்பட்டு, வருவதான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.