காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
சூரியவெவ வைத்தியசாலையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (01) காலை, வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சூரியவெவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சடலத்தை பரிசோதித்த போது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டு வலது காதில் ரத்தம் கசிந்துள்ளதாகவும் இது சந்தேகத்திற்குரிய மரணம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

- நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்








