காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்
காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ,வலிகாமம் வடக்கிலுள்ள 2400 ஏக்கர் காணிகளை விடுவிக்கக் கோரிய தொடர் போராட்டம் ஒன்று இன்று (21) முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மயிலிட்டிச் சந்தியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பதாதைகளைத் தாங்கியவாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டில்
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இருந்து வருகின்ற காணிகளை விடுவிக்க கோரிய அமைதி வழிப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
மக்களின் விவசாய நிலங்கள், குடியிருப்பு நிலங்கள் மற்றும் தொழில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு காணிகள் யுத்தம் காரணமாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வருகிறது.
ஆனால் யுத்தம் நிறைவிற்கு வந்த பின்னராக ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் மக்கள் காணிகளை படிப்படியாக சிறிய சிறிய துண்டுகளாக விடுவித்தனர்.
இருப்பினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுயமாக தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முடியாத நிலையில் 2400 ஏக்கர்
காணிகளையும் முழுமையாக விடுவிப்பதே தமது வாழ்வியலை முன்னெடுக்க முடியும் என்ற நோக்கில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை









