கறிவேப்பிலை கார தொக்கு செஞ்சு பாருங்க இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி

கறிவேப்பிலை கார தொக்கு செஞ்சு பாருங்க இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி
Spread the love

கறிவேப்பிலை கார தொக்கு செஞ்சு பாருங்க இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி

கறிவேப்பிலை கார தொக்கு வீட்டில் சமைத்து சாப்பிட்டு பாருங்க ,இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி அம்புட்டு சுவையை தரவல்லது .


அது மட்டுமல்ல ,உடலுக்கு ரெம்ப ஆரோக்கியமான உணவு கறிவேப்பிலை கார தொக்குங்க .

கறிவேப்பிலையில் தொக்கு செய்வதா ..? எப்படி என்பது தாங்க உங்கள் கேள்வி


ஆமாங்க கறிவேப்பிலையில், தொக்கு சமைப்பது எப்படி, என்பதை இதில் பார்க்க போகிறோம் .
வாங்க கருவேப்பிலை தொக்கு செய்வது, எப்படி என்பதை செய்முறையுடன் பார்க்கலாம் .

கறிவேப்பிலை கார தொக்கு செஞ்சு பாருங்க இட்லி தோசை சாதம் கூட சாப்பிட்டா சுவையே தனி

செய் முறை ஒன்று

அடுப்பில பாத்திரம் வைத்து ,எண்ணெய் விட்டு கொள்ளுங்க .அப்புறம் எண்ணெய் சூடானதும் ,அரை கரண்டி வெந்தயம் போட்டு கொள்ளுங்க .

வெந்தயம் போட்டு பத்து செக்கனுக்கு, இப்படியே வறுத்து வாங்க .அப்புறம் ஒரு கரண்டி கடலை பருப்பு,ஒரு கரண்டு உளுத்தம் பருப்பு ,இரண்டு கரண்டி பச்சை வேர் கடலை ( கச்சான் ) இப்போ இவற்றை சேர்த்து வதக்கி வாங்க .

பருப்பு எல்லாம் கலர் மாறி வரும் வரை வறுத்து வாங்க .

கலர் மாறி வந்ததும் ஒன்றரை கரண்டி மல்லி ,ஒரு கரண்டி சீரகம் .அதையும் ஈர்த்து வதக்கி வாங்க .காரத்திற்கு ஏற்ப கார மிளகாய் ,பெருங்காயம் சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .

இவை நன்றாக வறுபட்டதும் அதை எடுத்திடுங்க ,.இப்போ இரண்டு கப் அளவு கருவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வரை வறுத்து எடுத்திடுங்க .
அப்புறம் அடுப்பை அணைத்திடுங்க .

இப்போ சூடு ஆறியதும் ,மிக்சியில் போட்டு இவற்றை அரைக்கணும் .
.புளியும் கொஞ்சம் கரைத்து வைத்திடுங்க .
இப்பபோ அரைத்த பொருளுடன் இந்த புளியை மிக்சியில் போட்டு கலக்கி வாங்க

அப்புறம் அது கூட அரை கரண்டி மஞ்சள் ,கூடவே தேவையான உப்பு கலந்திருங்க . இப்போ எல்லாத்தையும் சேர்த்து அரைத்து வாங்க .

நன்றாக துவையல் அரைப்பது போன்று அரையுங்க .

அப்புறம் அடுப்பில பாத்திரம் வைத்து எண்ணெய் விட்டு ,கடுகு ,அரை கரண்டி உளுந்து ,இடிச்சு வைத்த 8 பூண்டு ,எலலத்தையும் நன்றாக வறுத்திடுங்க .

கலர் மாறியதும் ,அரைத்து வைத்த கலவைகளை இதில் போட்டு வதக்கி வாங்க .


இப்போ கருவேப்பிலை தொக்கு வைத்த மாதிரி ரெடியாடிச்சு .ரெம்ப அருமையாக இருக்கு ,இதுபோல நீங்களும் செய்து பாருங்க மக்களே .


Author: நலன் விரும்பி

Leave a Reply