காய்கறி வீட்டில் இல்லையா கவலை விடுங்க இட்லி தோசைக்கு ருசியான கிரேவி

காய்கறி வீட்டில் இல்லையா கவலை விடுங்க இட்லி தோசைக்கு ருசியான கிரேவி
Spread the love

காய்கறி வீட்டில் இல்லையா கவலை விடுங்க இட்லி தோசைக்கு ருசியான கிரேவி.

சில வேலைகளில் வீட்டில் காய்கறி இல்லாது போகும் .அவ்வேளை கிரேவி ,குழம்பு இல்லாம சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும் .

அவ்வாறான சந்தர்ப்பங்களில் ,இதோ இப்படி கிரேவி செய்யுங்க .
வாங்க காய்கறி இல்லாத நேரத்தில் ருசியான கிரேவி, எப்படி செய்வதை என்பதை பார்க்கலாம் வாங்க .


செய் முறை ஒன்று
அடுப்பில கடாய வைத்து அரை கரண்டி எண்ணெய் சேர்த்திடுங்க .எண்ணெய் சூடாகி வந்ததும் இந்த பொருட்களை சேர்த்திடுங்க .

ஒரு கரண்டி உளுந்து ,கூடவே இரண்டு கரண்டி கடலை பருப்பு ,ஒரு கரண்டி சீரகம் ,அரை கரண்டி மிளகு ,இரண்டு ஏலக்காய் ,ஒரு கரண்டி எள்ளு ,மூன்று முந்திரி பருப்பு ,ஒரு பட்டை ,கராம்பு ,வெட்டிய தேங்காய் .ஒரு கைப்பிடி கருவேப்பிலை ,சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .

காய்கறி வீட்டில் இல்லையா கவலை விடுங்க இட்லி தோசைக்கு ருசியான கிரேவி

கடலை பருப்பு கலர் மாறி வரும் வரைக்கும், நன்றாக வதக்கி வாங்க .மெல்லிய நெருப்பிலே வைத்து வதக்கி வாங்க .எரிஞ்சிடாம இருக்க இப்படி நெருப்பை குறைத்து வைத்து வறுத்தெடுங்க .

மெல்லிய நெருப்பில் வதக்கினால் சுவையும் தரமானதாக இருக்கும் ..
இப்போ நன்றாக வதங்கிருச்சு .இப்போ வதங்கியதை எடுத்து ஆற வைத்திடுங்க .

நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு அரைத்திடுங்க .
இப்போ இதை தண்ணி சேர்க்காமாக அரைத்திடுங்க .அப்புறம் தண்ணி விட்டு அரைத்திடுங்க .

இப்போ அடுத்து ஒரு கடாயில நல் எண்ணெய் சேர்த்திடுங்க .அப்புறம் ஒரு கரண்டி கடுகு சேர்த்திடுங்க .கடுகு நன்றாக பொரிந்து வரட்டும்

கடுகு நன்றாக பொரிந்த பின்னர் சீரகம் ,அரை கரண்டி வெந்தயம் ,பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்திடுங்க .


இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .தேவையான உப்பு சேர்த்திடுங்க .தீயின் வேகத்தை அடுப்புல குறைத்து நன்றாக வதக்கி வாங்க
இதில் இரண்டு பச்சை மிளகாய் கீறி சேர்த்திடுங்க .

கூடவே ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்த்திடுங்க .சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

இப்போ ஒரு கரண்டி இஞ்சி சேர்த்திடுங்க .இஞ்சி பச்சை வாசம் போகும் வரைக்கும் நன்றாக வாதகிடுங்க .


அப்புறம் அரை கரண்டி மஞ்சள் ,ஒரு கரண்டி மிளகையே தூள் ,ஒரு கரண்டி மல்லி தூள் ,ஒரு கரண்டி கரம் மசாலா ,சேர்த்திடுங்க .கரம் மசாலாவுக்கு பதிலாக சிக்கன் மசலாவும் சேர்க்கலாம் .


இப்போ நன்றாக கரைத்திடுங்க .மசாலா பச்சை வாசம் போன பின்னர் ,ஏற்கனவே அரைத்து வைத்தவற்றை இப்போ இதில் சேர்த்திடுங்க .

தேவையான அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .இது கூடவே புளி கரைச்சு சேர்த்திடுங்க .இப்போ எல்லாத்தையும் சேர்த்து நன்றாக கரைத்திடுங்க .
இப்போ இரண்டு சைஸ் வெல்லம் சேர்த்திடுங்க .

இப்போ இதில தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கி வாங்க .இப்போ மூடி போட்டு முடிங்க .


எண்ணெய் பிரிந்து வரும் வரைக்கும் வேக வைத்திடுங்க .இடையில மூடி திறந்து பார்த்து மிக்ஸ் பண்ணிடுங்க .


இடை இடையில் திறந்து பார்த்து கலக்கிடுங்க .இல்லை என்றால் அடி பிடிச்சிடும் .இப்படி காய்கறி இல்லாத கிரேவி ரெடியாச்சு .

இந்த கிரேவி தோசை ,இட்லி கூட சேர்த்து சாப்பிட ரெம்ப சுவையாக இருக்கும் .
வீட்டில் காய்கறி இல்லாத நேரத்தில இப்படி ஒரு கிரேவி சாப்பிட்டு மகிழுங்க.


இப்படியும் காய்கறி இல்லாம கிரேவி இ செய்திடலாம் என்பதை பார்த்து நீங்க வியந்து போயிருப்பீங்க .

டீ கடை மசால் உருளைக்கிழங்கு போண்டா 10 நிமிடத்தில் செஞ்சு சாப்பிடுங்க


அது போலவே இந்த சமையல் ,காய் கறி இல்லாத கிரேவி ,குழம்பு உள்ளதுங்க .மனம் திறந்து வாழ்த்து கூறலாமே மக்களே .


Author: நலன் விரும்பி

Leave a Reply