கட்டாரில் அமெரிக்க தளங்களை தாக்கிய ஈரான்

கட்டாரில் அமெரிக்க தளங்களை தாக்கிய ஈரான்
Spread the love

கட்டாரில் அமெரிக்க தளங்களை தாக்கிய ஈரான்

கட்டாரில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடாத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஏவுகணை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக ஈரானின் Tasnim செய்தியை மேற்கோள் காட்டி அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, “வெற்றி அறிவிப்பு” என்று அழைக்கப்படுகிறது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானத் தளத்தை குறிவைத்து பழிவாங்கும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக

அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈரான், அமெரிக்காவின் அணு தளங்கள் மீது மேற்கொண்ட குண்டுவீச்சுக்கு பதிலடி அளிக்கும் வகையில், கத்தார் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் மோசமாக்கியுள்ளது.

இரவில் வானில் ஏவுகணைகள் பாய, அவற்றைத் தடுக்க வானில் ஏறிய இன்டர்செப்டர்கள் வெடிக்க, டோஹா நகரில் உள்ள மக்கள் வானத்தை பார்த்தபடி பதட்டத்துடன் இருக்கின்றதாக அச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இது கட்டாருக்கு எதிரான தாக்குதல் அல்ல : ஈரான் அறிவிப்பு

கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானப்படை தளத்தின் மீதான ஈரானிய ஏவுகணைத் தாக்குதல் கட்டாரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு அப்பால் நடந்ததாக ஈரானிய தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறுகிறது.

இந்த நடவடிக்கை நட்பு மற்றும் சகோதரத்துவ நாடான கட்டார் மற்றும் அதன் மக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது,

மேலும் ஈரான் இஸ்லாமிய குடியரசு கட்டாருடன் வரலாற்று உறவுகளைப் பேணுவதற்கும் தொடர்வதற்கும் உறுதிபூண்டுள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எனினும் ஈரானின் இந்தத் தாக்குதலுக்கு கட்டார் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் தாக்குதலை கடுமையாக கண்டிக்கும் கட்டார்

கட்டாரில் உள்ள அமெரிக்க அல்-உதெய்த் விமானப்படை தளத்தின் மீதான ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தாக்குதல் “கட்டாரின் இறையாண்மை,

வான்வெளி மற்றும் ஐ.நா. சாசனத்தை மீறுவதாக” கட்டார் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Majed al-Ansari தெரிவித்துள்ளார்.

“கட்டாரில், சர்வதேச சட்டத்தின்படி இந்த ஆக்கிரமிப்புக்கு நேரடியாக பதிலளிக்க எங்களுக்கு உரிமை உண்டு,” என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்தார்.

கட்டார் வான் பாதுகாப்பு இந்த தாக்குதலை முறியடித்து ஈரானிய ஏவுகணைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டதாக அவர் மேலும் கூறினார்.