வவுனியாவில் மீட்கப்பட்ட சடலம் - 5 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மீட்கப்பட்ட சடலம் – 5 பேர் கைது

வவுனியாவில் மீட்கப்பட்ட சடலம் – 5 பேர் கைது

வவுனியா, பூவரசன்குளம், மணியர்குளம் பகுதியில் காயங்களுடன் மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, பூவரசன்குளம், மணியர்குளம் குளக்கட்டின் அருகில் வெட்டு காயங்களுடன் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என்பவர் கடந்த 09 ஆம் திகதி காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த பூவரசன்குளம் பொலிசார் குறித்த இளைஞருடன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட 5 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும்,
மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.

No posts found.
4 பேர் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

4 பேர் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசேட அறிவிப்பு

4 பேர் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசேட அறிவிப்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் மரணம் தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வவுனியா பொலிசார் நேற்று (11) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை (07) காலை தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 42 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரின் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை புதன்கிழமை (08) இரவு

மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. ஆனால் அவர்கள் நஞ்சு அருந்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

4 பேர் மரணம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசேட அறிவிப்பு

இதனையடுத்து, உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் முடிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும். அதன் முடிவுகள் வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும். குறித்த சம்பவம் தொடர்பில் சிசிரிவி காட்சிகள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

No posts found.
ஜெர்மனியில் இருந்து உக்கிரனுக்கு பறக்கும் 90 சிறுத்தை டாங்கிகள்
Posted in உலக செய்திகள்

ஜெர்மனியில் இருந்து உக்கிரனுக்கு பறக்கும் 90 சிறுத்தை டாங்கிகள்

ஜெர்மனியில் இருந்து உக்கிரனுக்கு பறக்கும் 90 சிறுத்தை டாங்கிகள்

ஜெர்மன் நாடு உக்கிரேனுக்கு திட்டமிட்ட படி 90
சிறுத்தை ஒன்று டாங்கிகள் 90 வழங்குகிறது ,

அதன் படி முதலாவது டாங்கி தொகுதிகள் ,
உக்கிரைன் களத்திற்கு அனுப்பி வைக்க படுகின்றன .

இந்த டாங்கிகள் இயக்கம் ,செயல்பாட்டு திறன் தொடர்பான,
பயிற்சிகள் பெற்று ,உக்கிரேன் சிறப்பு தாங்கி படைகள் வெளியேறினர் .

அவ்வாறான டாங்கிகள் வரும் வாரங்களில் ,
ரஷ்ய இராணுவத்தினருக்கு எதிராக களம் இறக்க
படும் என எதிர் பார்க்க படுகிறது .

ஆயுதங்களை வாங்கி வாங்கி குவிக்கும் உக்கிரேன் இராணுவத்தால் .
இழந்த பகுதிகளை ஒருவருடம் கழித்தும்
பெற்று கொள்ள முடியாது உள்ளது .

இந்த தாங்கி வருகையின் பின் உக்கிரைன் ரஸ்யா நாடு முழுவதையும் கைப்பற்றி ஜெலன்ஸி ஆட்சி செய்தாலும் வியப்பதற்கு இல்லை .

அரசியலுக்கு வராமல் என்னை தடுத்தது யார் உண்மையை அவிழ்த்த ரஜனி
Posted in உலக செய்திகள்

அரசியலுக்கு வராமல் என்னை தடுத்தது யார் உண்மையை அவிழ்த்த ரஜனி

அரசியலுக்கு வராமல் என்னை தடுத்தது யார் உண்மையை அவிழ்த்த ரஜனி

தமிழகத்தின் முதலமைச்சராக வரும் எண்ணத்துடன் நடிகர் ரஜனிகாந்த் அவர்கள் ,தேர்தலில் போட்டியிடும் நோக்குடன் ,அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தார் .

இவ்வாறான அரசியல் கட்சி ஆரம்பம் முதல் முடித்தல் வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
ஆனால் திடீரென நான் அரசியலுக்கு வரவில்லை என ரஜனி தெரிவித்தார் .

அதற்கு தனது அரசியல் செயல் இழந்த நிலையில்சிகிச்சை பெற்று வருவதால்
மருத்துவர் வழங்கிய ஆலோசனையின் ,
அடிப்படையில் அரசியலில் இருந்து விலகியதாக ரஜனி தெரிவித்தார் .

நீண்ட காலம் கழித்து முக்கிய அரசியல் வாதிகள் ,மற்றும் பிரபலங்கள் உள்ள
மேடையில் இதனை அவர் தெரிவித்தார் .

அமெரிக்கா ராடார்களை தாக்கி அழித்த ரஷ்யா
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா ராடர்களை தாக்கி அழித்த ரஷ்யா

அமெரிக்கா ராடர்களை தாக்கி அழித்த ரஷ்யா

அமெரிக்கா அறிப்பு counter-battery radars இரண்டினை தாம் அழித்துள்ளதாக
ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது .

அமெரிக்கா ஆயுதங்கள் ரஸ்யாவுக்கு எதிராகஉக்கிரைன் பயன் படுத்தி வருகிறது .


அவ்விதமான முதன்மை ஆயுத தளபாடங்களை இன்று ரஷ்ய துல்லியமாக அழித்துள்ளது .

பல மில்லியன் டொலர் பெறுமதியான இந்த ஆயுதங்களை கடனுக்கு
பெற்று ரஸ்யாவுக்கு எதிராக உக்கிரைன் பயன் படுத்தி வந்த நிலையில் ,
உக்கிரைன் வந்தடைந்து சில மாதங்களில் ரஷ்ய இராணுவத்தினரால் அழிக்க பட்டுள்ளது .

உரிய முறையில் இத்தனை இயக்கி இருந்தால் ,
ரஷ்ய இராணுவத்தால் இவை அழித்திருக்க முடியாது,
என அமெரிக்கா பெல்ட்டி அடிக்கிறது .

காதுக்குள் கட்டெறும்பு புகுந்த கதையாக ,
உக்கிரைன் நிலை உள்ளதை ,
இதன் ஊடாக அவதானிக்க முடிகிறது .

பிரிட்டனில் அதிக சினோ குளிரில் மக்கள்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் அதிக சினோ குளிரில் மக்கள்

பிரிட்டனில் அதிக சினோ குளிரில் மக்கள்

பிரிட்டனில் கடந்த சில நாட்களாக அதிக பனிமழை பொழிவு
இடம்பெற்று வருகிறது .

உறைபனி குளிர் இடம்பெறுவதால் மக்கள் சொல்லென்னா
துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

வீதிகளில் நடமாட முடியாத குளிர் நிலவுவதுடன் ,
வீடுகள் மேலே பனிக்கட்டிகள் வீழ்ந்து கிடப்பதால்
வீடுகளுக்குள் அதிக குளிர் காணப்படுகிறது .

இந்த கால நிலை தொடந்து சில நாட்களுக்கு நீடிக்கும்
என தெரிவிக்க படுகிறது .,

நாமல் ராஜபக்ஷவிற்கு தலைவர் பதவி
Posted in இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷவிற்கு தலைவர் பதவி

நாமல் ராஜபக்ஷவிற்கு தலைவர் பதவி

மேலும் நான்கு துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கான தலைவர்கள் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டனர்.

அதற்கமைய, சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டார்.

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் வழிமொழிந்தார்.

அதேபோன்று, பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரன நியமிக்கப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச வழிமொழிந்தார்.

நாமல் ராஜபக்ஷவிற்கு தலைவர் பதவி

இதேவேளை, வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நாளக பண்டார கோட்டேகொட நியமிக்கப்பட்டார்.

அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன அதனை வழிமொழிந்தார்.

மேலும், பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தனித்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட நியமிக்கப்பட்டதுடன், அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் முன்மொழிந்ததுடன், அதனை பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா வழிமொழிந்தார்.

பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க மற்றும் பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ. ஜனகாந்த சில்வா ஆகியோர் இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டனர்.

No posts found.
கடலில் மூழ்கும் அபாயம் - தலைநகரை மாற்றும் நாடு
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கும் அபாயம் – தலைநகரை மாற்றும் நாடு

கடலில் மூழ்கும் அபாயம் – தலைநகரை மாற்றும் நாடு

நிலநடுக்கம், ஜாவா கடலில் மூழ்கும் அபாயம் என பல அச்சுறுத்தல்கள் காரணமாக, தலைநகர் ஜகார்த்தாவை கைவிட்டுவிட்டு, இந்தோனேசிய தலைநகராக போர்னியோவை மாற்றும் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ, நெரிசல், காற்று மாசுவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஜகதார்த்தாவுக்கு நிலநடுக்கம் மற்றும் கடலில் மூழ்கும் அபாயங்களும் காத்திருப்பதால் விரைவில் தலைநகர் என்ற அந்தஸ்திலிருந்து ஓய்வுபெறும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்தோனேசியா 2022 ஆம் ஆண்டு மத்தியிலேயே புதிய தலைநகரை கட்டமைக்கும் பணிகளை தொடங்கிவிட்டது.

கடலில் மூழ்கும் அபாயம் – தலைநகரை மாற்றும் நாடு

தற்போது, இந்தோனேசிய அரசானது, ஜகார்த்தாவை காலி செய்துகொண்டு போர்னியோ தீவை நோக்கி நகர்கிறது.

பசுமையான தீவுப் பகுதியை தலைநகராக மாற்றுவதற்கு ஏராளமான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். வனப்பகுதி அழிக்கப்பட்டு, வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

எனினும் தலைநகரை மாற்றும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

ஜகார்த்தா வேகமாக கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும், 2050 ஆம் ஆண்டுக்குள் நகரின் மூன்றில் ஒரு பங்கு கடலில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் நிலத்தடி நீர் மற்றும் காற்று கடுமையாக மாசடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No posts found.
போதையில் அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திய சாரதி
Posted in இலங்கை செய்திகள்

போதையில் அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திய சாரதி

போதையில் அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திய சாரதி

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி கொடிகாமம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் இரண்டு மாடுகள் உயிரிழந்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம் பெற்ற தினம் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி மது போதையில் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அத்துடன் அவர் தனிப்பட்ட தேவை ஒன்றுக்காக, மனைவி வீட்டில் இருந்து தொலைபேசி அழைப்பு எடுத்ததற்கு அமைய, தொலைபேசியில் உரையாடிக்கொண்டு அரச வாகனத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமையும் தெரியவந்துள்ளது

No posts found.
பிரிட்டனில் கடும் சினோ சிக்கிய கார்கள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் கடும் சினோ சிக்கிய கார்கள்

பிரிட்டனில் கடும் சினோ சிக்கிய கார்கள்

பிரிட்டன் M62 வேகா சாலையில் ஏற்பட்ட அதிக சினோ காரணமாக .வாகனங்கள் பனிமழை ஐஸ் கட்டுக்குள் சிக்கின .

நூற்றுக்கு மேற்பட்ட கார்கள் சிக்கிய நிலையில் ,மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெற்றன்ன ,.தற்போது ஆளை கொல்லும் உறைபனி குளிர் பிரிட்டன் தளுவிய நிலையில் காணப்படுகிறது .

இந்த சீரற்ற கால நிலையால் ,தடிமன் ,காய்ச்சால் ,
நோயினால் பல ஆயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .

சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டதால் ,
தொழிலாளர்கள் பெரும் இடர்களை சந்தித்துள்ளனர் .
இந்த கால் நிலையானது மேலும் சில
நாட்களுக்கு நீடிக்கும் என படுகிறது .

ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு

ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு

ரஷ்ய இராணுவம் கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்திய
ஐந்து முனை தாக்குதல்களில் ,உக்கிரைன் இராணுவத்தை சேர்ந்த 650
பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் இவர்கள் தாங்கி வந்த ,பத்து பீரங்கிகள் ,எஸ் 300 ரக ஏவுகனை செலுத்திகள் ,பிக்கப் ,டிரக் ,டாங்கிகள்,கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளன .

இவற்றுடன் எட்டு உக்கிரைன் தயாரிப்பு உளவு விமானங்கள் ,
Su-27 ரக சண்டை விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக,
ரஷ்ய தெரிவித்துள்ளது .

ரஷ்ய நடத்தி வரு புதிய வகை கைபர் சோனிக் ஏவுகணைகளை,
சுட்டு வீழ்த்த முடியா நிலையில் ,உக்கிரைன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது .


கடந்த இரு நாட்களில் மட்டும் 116 இவ்வகையான ஏவுகணைகளை ரஷ்யா வீசியுள்ளது .

ரஷ்ய திடீர் தாக்குதல் 650 இராணுவம் பலி 9 விமானங்கள் அழிப்பு

இந்த ஏவுகணை தாக்குதல் துல்லியமாக ,இலக்குகளை சென்று தாக்கின .
உக்கிரன் இராணுவம் இந்த ஏவுகணைகளிற்கு எவ்வாறான முறியடிப்பு தாக்குதல்களை மேற்கொள்ள முனைகின்றனர் என்பதை ,
சோதனை செய்திடும் தாக்குதலாக இவை அமைந்துள்ளது .

மேலும் இவ்வாறான தாக்குதல்களை ரஷ்ய தீவிர படுத்தினால் ,முன்னர் ஆக்கிரமித்தபகுதிகளை ரஷ்ய மீள மீட்கும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம் .

எதிரியின் ஆழத்தை அளவிட ,ரஷ்ய நடத்தும் இந்த தாக்குதல் ,
அவர்கள் திட்டமிடல் போல ,வெற்றி பெற்றால் ,
உக்கிரைனின் பல பகுதிகள் ரஸ்யாவிடம்
தொடர்ச்சியா விழும் நிலைக்கு செல்லும் .

இதனை தடுக்க அமெரிக்காவிடம் ஜெலன்ஸி உதவியை கோரியுள்ளார் .
ரஸ்யாவுக்கு பதிலடியாக புதிய தமது போராயுதத்தை,
களமிறக்க அமெரிக்கா தயாராகி வருகிறது .

இங்கு பிரச்னை இல்லை நாட்டுக்கு வாருங்கள்
என அகதிகளாக சென்ற 20 லட்சம் மக்களை மீள
அழைத்தார் ஜெலன்ஸி .


தற்போது ரஷ்ய நடத்திய ஒரே நாள் தாக்குதலில்
இரண்டு மில்லியன் மக்கள் இருளில் தவித்து வருகின்றனர் .

இவ்வாறு ஜெலன்ஸியின் காமடி தனத்தால் போர் நீடித்து சென்றால்
,கோட்டபாயவி போல ஜெலன்சியும் மக்களினால் விரட்ட படும்
நபராக மற்றம் பெற போகிறார் என்பதை ,இந்த களமுனை
நகர்வுகள் இடித்துரைக்கின்றன .

ஆக மொத்தம் உக்கிரைன் ஆயுதங்களின்
சோதனை கூடமாக மாற்றம் பெற்றுள்ளது .

இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்

இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்

1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.

1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிச் வந்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 159 சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்தில் இறங்கியுள்ளதுடன் அவர்கள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் செல்லவுள்ளனர்.

அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமான 294 மீட்டர் நீளமுள்ள கப்பல் தாய்லாந்தில் இருந்து வந்துள்ளதாகவும், கப்பல் இன்று இரவு துபாய்க்கு புறப்பட உள்ளதாகவும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No posts found.
வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய தாய்
Posted in இலங்கை செய்திகள்

வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய தாய்

வளர்ப்பு மகளை கொடூரமாக தாக்கிய தாய்

ராகம பிரதேசத்தில் வளர்ப்பு மகளை உடல்ரீதியாக சித்திரவதை செய்த பெண்ணொருவர் மார்ச் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ராகம – குருகுலேவ பிரதேசத்தில் உள்ள வீட்டில் வைத்து 39 வயதுடைய குறித்த பெண், 17 வயதுடைய வளர்ப்பு மகளை தாக்கியுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த யுவதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட யுவதியின் தாய் உயிரிழந்ததையடுத்து தந்தை மறுமணம் செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, தாக்கியதாக கூறப்படும் பெண்ணுக்கு 09 வயதில் ஒரு பெண் பிள்ளை இருப்பதாகவும்,
தந்தை வெளிநாட்டில் தொழில்புரிவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
பிரிட்டனில் துப்பாக்கி சூடு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் துப்பாக்கி சூடு

பிரிட்டனில் துப்பாக்கி சூடு

பிரிட்டன் யோர்க்ஸ்ச்சி பகுதியில் வாலிபன் ஒருவர் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .


ஜாக்கட்டுக்குள் கத்தியை மறைத்து கொண்டு வந்த நபர் ,
திரிப வெட்டு தாக்குதலை மேற்கொண்டதுடன் சூட்டு தாக்குதலையும் நடத்தினர் .

இரத்த வெள்ளத்தில் கிடந்த நபர் மீட்க பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .குற்றவாளிகளை கைது செய்திடும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

லண்டனில் கத்தி வெட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டு படுத்த 30.000 போலீசார் ரோந்தில் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

ஒரே நாளில் 1000 அகதிகள் துனிசியாவுக்குள் நுழைவு
Posted in உலக செய்திகள்

ஒரே நாளில் 1000 அகதிகள் துனிசியாவுக்குள் நுழைவு

ஒரே நாளில் 1000 அகதிகள் துனிசியாவுக்குள் நுழைவு

ஆபிரிக்கா நாட்டை சேர்ந்த அகதிகள் ,கப்பல்கள் மற்றும் படகுகள் வழியாக ,
சர்வதேச கடல் எல்லையை கடந்து 1000 பேர் துனிசியாவுக்குள் நுழைந்துள்ளனர் .

துனிசியா கடலோர காவல் படையினர் ,
இந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளை மடக்கி பிடித்தனர் .

ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக கறுப்பின அகதிகள்,
தமது நாட்டுக்குள் நுழைந்துள்ளதாக துனிசியா தெரிவித்துள்ளது .

ஆபிரிக்கா அரசுடன் தாம் பேச்சு வார்த்தையில் ,
ஈடுபடவுள்ளதாகவும் ,இந்த அகதிகளை மீள ஆப்ரிக்கா ,
அனுப்புவதற்கு துனிசியா தயராகி வருகிறது .

ரோஹிதவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி
Posted in இலங்கை செய்திகள்

ரோஹிதவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி

ரோஹிதவின் கடன் அட்டையை பயன்படுத்தி மோசடி

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடனட்டையில் இருந்து சுமார் 400 அமெரிக்க டொலர் இணையத்தளத்தில் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நாரஹேன்பிட்டி பொலிஸார் கொழும்பு மேலதிக நீதவானிடம் நேற்று அறிவித்துள்ளனர்.

ரோஹிதவின் கிரெடிட் கார்டில் இருந்து 387 அமெரிக்க டொலர் பெறுமதியான நான்கு இணையப் பரிவர்த்தனைகளை யாரோ ஒருவர் மேற்கொண்டுள்ளதாக மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 7, விஜேராம மாவத்தை, இலக்கம் 117 இல் வசிக்கும் ரோஹித ராஜபக்ஷ, மார்ச் 3 ஆம் திகதி மாத்தறைக்கு சென்று கொண்டிருந்த போது தனது கடனட்டை காணாமல் போனதாக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பரிவர்த்தனை தொடர்பான வங்கி கணக்கு அறிக்கைகளை வழங்குமாறு தனியார் வங்கியின் தலைமை அலுவலக முகாமையாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்

No posts found.
உள்ளூர் மூலிகைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவுப் பொருள்
Posted in இலங்கை செய்திகள்

59% குடும்பங்கள் உணவின்றி தவிப்பு அறிக்கை

59% குடும்பங்கள் உணவின்றி தவிப்பு அறிக்கை

2022 ஆம் ஆண்டில் குறைந்து வரும் உணவு உற்பத்தி மற்றும் பணவீக்கம் காரணமாக இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐம்பத்தொன்பது (59) வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் தெரியவந்துள்ளது.

அத்துடன், “இலங்கையில் 28 சதவீதம் அல்லது 6.3 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்” என்று தெரியவந்துள்ளது.

விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, பூச்சிகளால் ஏற்படும் பயிர் அழிவை குறைந்தபட்சமாக குறைப்பது, அறுவடைக்குப் பிந்தைய பயிர் அழிவைத் தடுப்பது மற்றும் விவசாயத் துறையில் புதுமையான முறைகளை அறிமுகப்படுத்துவது மற்றும் உணவைப் பெறுவதற்கான நம்பகத்தன்மையை அதிகரிப்பது ஆகியவை மாற்று வழிகளாக எடுத்துக்காட்டப்பட்டன.

No posts found.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் சிக்க போகும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

மேஜர் ஜெனரலுக்கு பங்கேற்க தடை

மேஜர் ஜெனரலுக்கு பங்கேற்க தடை

இலங்கையின் மனித உரிமைகள் பதிவின் தற்போதைய மீளாய்வுக்கான அரசாங்கத் தூதுக்குழுவில் குற்றம் சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு ICPPG ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள்

தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர்

ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் ICPPG வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள்

மற்றும் சித்திரவதைக்குள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களைப் போன்ற சர்வதேச அரசு சார்பற்ற மனித உரிமைகள் அமைப்புக்களிற்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆணடு கார்த்திகை மாதம் 7ஆம் திகதி முதல் 2017 ஆம் ஆண்டு ஆடி மாதம் 27 ஆம்

திகதி வரை குலதுங்க ஜோசப் முகாம் (SFHQ-W) தளபதியாக இருந்தார். இந்த காலகட்டத்தில் ஜோசப் முகாமில் சித்திரவதைக்கு ஆளான பலர் பிரித்தானியா மற்றும் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர்.

மேஜர் ஜெனரலுக்கு பங்கேற்க தடை

சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக ICPPG அவர் பங்கேற்பதை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறது. 2016 இல் குலதுங்கவின் முன்னோடியான சிசிர மென்டிஸ் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு

அனுப்பப்பட்டது போது பெலிஸ் கெயர் செய்ததைப் போல குறைந்தது அவரது பங்கு பற்றி அவரிடம் வினா எழுப்புமாறு ஐ.நா மனித உரிமைகள் கு

ழுவை கோரியுள்ளதுடன் முன்னாள், தற்போதைய மற்றும் எதிர்கால குற்றவாளிகளுக்கு ஒரு தீவிரமான செய்தியை அனுப்புமாறும் கோரியுள்ளது. இது மற்றவர்கள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபடுவதை தடுக்கும்.

ICPPG பணிப்பாளர் திருமதி அம்பிகை செல்வகுமார் குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் குலதுங்க பங்கேற்பதை நிறுத்துமாறு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகளை

ஒன்றிணைத்து ஐ.நாவை வலியுறுத்துமாறு அழைப்பு விடுத்ததுடன் இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மீளாய்வு

செய்வதற்கு எவ்வாறு ஐ.நா போர்க்குற்றவாளியை அனுமதிக்க முடியும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நாணயத்தாள்கள் அச்சிடப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் பணம் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

700 போலி 5000 ரூபா நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 40 வயதுடைய சந்தேகநபர் திருகோணமலை
பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No posts found.
வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் பகுதியில் நேற்று (09) இரவு வெட்டுக்காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சடலம் காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மரண விசாரணை அதிகாரியின் வருகைக்காக சடலம் தற்போதும் அதே இடத்தில் காணப்படுகின்றது

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மர்மமான முறையில் மரணங்கள் அதிகரித்து செல்வதுடன் மூன்று நாட்களுக்கு முன்னர் வவுனியா கற்குழி பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நால்வர் உயிரிழந்த முறையில் சடலமாக மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

No posts found.