அமெரிக்காவில் அதிரும் துப்பாக்கி சண்டை இருவர் மரணம் ஐவர் காயம்
அமெரிக்காவில் அதிரும் துப்பாக்கி சண்டை இருவர் மரணம் ஐவர் காயம்
அமெரிக்கா அரிசோனாவின் யூமாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ,
2 பேர் இறந்தனர், 5 பேர் காயமடைந்துள்ளனர் என
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
அரிசோனாவின் யூமாவில் ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்,
இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
கொடிய செயலைச் செய்த நபர் அல்லது நபர்களை அடையாளம் காண ,
உதபுபவர்களுக்கு $1,000 டொலர் வெகுமதி வழங்கப்படும் என
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
போலந்து அரசுக்கு சொந்தமான PLL LOT விமான நிறுவனம்,
வார்சாவின் சோபின் விமான நிலையத்தில் தரை இறங்கும் பொழுது ,
ஆளில்லா விமானம் அருகே பறந்ததல் பர பரப்பு ஏற்பட்டது
சனிக்கிழமையன்று தரையிறங்கும் அணுகுமுறையை மேற்கொண்டபோது,
விமானத்தில் இருந்து 30 மீட்டர் (98 அடி) தொலைவில்
ஆளில்லா விமானம் பறந்து மிரட்டி சென்றுள்ளது .
போலந்து விமானம் அருகே பறந்து மிரட்டி சென்ற போர் விமானம் தப்பிய பயணிகள்
விமான பயண வழித்தடத்தில் இவ்விதமான விமானங்கள்
பறப்பது மிக ஆபத்தான ஒன்றாகும் ,
அந்த சம்பவம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில்,
அரச விமான நிறுவனம் மற்றும் ,இராணுவ
வான்படையினர் ஆராய்ந்து வருகின்றனர் .
குறித்த விமானம் மோதி இருந்தால் ,அந்த விமானத்தில் பயணித்த அணைத்து
பயணிகளும் பலியாகி இருப்பார்கள் ,ஆனால் தெய்வாதீனமாக
யாவரும் தப்பித்து கொண்டனர் .
மேற்படி சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இவ்வாறு அருகில் பறந்து மிரட்டி சென்றது ,ரஷ்ய விமானமாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
தங்க கடத்தல் முறியடிப்பு நபர் கைது
தங்க கடத்தல் முறியடிப்பு நபர் கைது
இந்திய கொச்சி விமான நிலையத்தின்
ஊடகஇடம்பெற்ற பெரும் தங்க கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
ஐம்பத்தி ஆறு லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை ,
கடத்தி வந்த நபரே சுங்க சோதனையில் வசமாக சிக்கினார் .
மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து ,கொச்சிக்கு வருகை தந்த நபரே சிக்கியுள்ளார் .
தொடராக இவ்வாறான கடத்தலில் இவர் ஈடுபட்டு வந்துள்ளதாக கண்டறிய பட்டுள்ளது .
நபர் கைது செய்யப் பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பார படுத்த பட்டுள்ளார் .
இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை இராணுவ தளபதிகள் பலி
இஸ்ரேலில் வெடித்த ஏவுகணை இராணுவ தளபதிகள் பலி,
மீண்டும் வெடித்த போர் ,பாரிய இழப்பு
நடராஜர் சிலையை திருடிய சிப்பாய் சிக்கினார்
நடராஜர் சிலையை திருடிய சிப்பாய் சிக்கினார்
வவுனியா பிரதேசத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் ஒன்றில் நடராஜர் சிலையை திருடியதாக கூறப்படும் இராணுவ வீரர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் சிலையை திருடி விற்பனைக்காக பையில் கொண்டு செல்லும்போது வேன் சாரதிகள் குழுவினால் பிடிக்கப்பட்டு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அப்பகுதியிலுள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அக்கராயன்குளம் இராணுவ முகாமில் கடமையாற்றும் 21 வயதுடைய இராணுவ சிப்பாய் ஆவார். திருடப்பட்ட சிலையின் மதிப்பு 55,000 ரூபாய் என கோவிலின் பூசாரி பொலிஸாரிடம் கூறியுள்ளார்
சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை போருக்கு பயன்படுத்த முடியாது.
சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை போருக்கு பயன்படுத்த முடியாது.
அம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்கள் எந்தவொரு யுத்தத்திற்கோ அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்கோ பயன்படுத்த முடியாது;இலங்கை தெரிவித்துள்ளது .
வர்த்தகத்திற்கு மாத்திரம் பயன்படுத்த முடியம் என்பது,
சீனாவுடனான இலங்கையின் உடன்படிக்கை மிகவும் தெளிவாக உள்ளது.
நாங்கள் இந்தியாவுடன் சிறந்த உறவைக் கொண்டுள்ளோம்.
இந்தியா உதவி செய்து வருகிறது, நாங்கள் பதிலடி கொடுக்கிறோம்.
சீனா ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை போருக்கு பயன்படுத்த முடியாது.
நாங்கள் இந்தியாவில் இருந்து எங்கள் விமான நிலையங்களுக்கு விமானங்களைத் தொடங்கியுள்ளோம்.
மெட்ராஸுக்கு மற்றும் அங்கிருந்து படகுச் சேவைகளைத் தொடங்கியுள்ளோம்.
இந்தியாவுடனான இணைப்பை அதிகரித்துள்ளோம் என்று இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்து குத்து கரணம் அடித்தார்.
முல்லையில் சிறுமி கடத்தல் முறியடித்த வாலிபர்கள் குழு
முல்லையில் சிறுமி கடத்தல் முறியடித்த வாலிபர்கள் குழு
முல்லைத்தீவு கைவேலி பகுதியில் 10 வயது சிறுமி ஒருத்தியை
கடத்த முயன்ற நபரை ,வாலிபர்கள் மடக்கி பிடித்தனர் .
சம்பவத்தில் கைக் குட்டையில் மயக்க மருந்தை தடவி ,
அதன் ஊடாக சிறுமியை கடத்தி செல்ல முற்பட்டுளளார் .
ஆனால் அவ்வேளை அங்கு வருகை தந்த வாலிபர்கள் குழு
அந்த வாலிபனை மடக்கி பிடித்து ,காவல்துறையில் ஒப்படைத்தனர் .
மேற்படி சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
பாகிஸ்தானில் இராணுவம், கிளர்ச்சி படைகள் மோதல்
பாகிஸ்தானில் இராணுவம், கிளர்ச்சி படைகள் மோதல்
பாகிஸ்தான் பளூஸ்த்தான் மாகாணத்தின் எல்லை பகுதியில் ,
அரச இராணுவம் மற்றும் கிளர்ச்சி படைகளுக்கு
இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன .
இந்த மோதல்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் .
இராணுவ முகாமிற்குள் நுழைந்து நடத்த பட்ட தாக்குதலில் ,
இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .
குறித்த பகுதியில் பாகிஸ்தான் தலிபான்கள் நிறைந்து வாழும் பகுதியாக
காணப்படுகிறது .
இவர்களே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது ,
எனினும் இதுவரை எந்த அமைப்பும்
இந்த தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை .
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல் ,ரஸ்யாவை மிரட்டும் புதிய ஏவுகணைகள்
விமானங்களை உடைத்தெறிந்த ஏவுகணை 85 விமானம் வீழ்த்தல்
இந்து ஆலயத்திற்குள் குந்த வந்த புத்தர் – துரத்திய தமிழர்கள்
இந்து ஆலயத்திற்குள் குந்த வந்த புத்தர் – துரத்திய தமிழர்கள்
திருகோணமலை நெல்சன் திரையரங்கிற்கு முன்னால் வில்லூன்றி கந்தசாமி ஆலயத்திற்கு சொந்தமான காணியில் பௌத்த சின்னங்களை நிறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணின் கவனயீர்ப்பு இன்று (14) ஞாயிற்றுக்கிழமை இரண்டாது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வில்லூன்றி கந்தசாமி ஆலையத்துக்கு சொந்தமான காணியில் தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட பௌத்த சின்னங்களை நிறுவ இன்று (14) ஞாயிற்றுக்கிழமை பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட ஏற்பாடுகள் செய்தனர்.
இதனையறிந்த தமிழ் தேசிய முக்கள் முன்னணி கட்சி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் .
இந்து ஆலயத்திற்குள் குந்த வந்த புத்தர் – துரத்திய தமிழர்கள்
நேற்று (13) சனிக்கிழமை காலையில் பௌத்த சின்னங்களை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்ட காணிக்கு முன்பாக ஓன்றிணைந்து தமிழ் உரிமைக்கு குண்டுகள் தீர்வாகாது, எமது நிலம் எமக்கு வேண்டும், மண்துறந்து புத்தருக்கு தமிழர் மண்மீது ஆசையா?
திருமலை எங்கள் நகரம், ஆக்கிரமிப்பிற்கு அடிபணியோம், வடக்கும் கிழக்கும் தமிழ் தாயகம், போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு நேற்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பகல் 2 மணிவரை ஈடுபட்டபின்னர் அங்கிருந்து விலகி சென்றனர்.
அதனை தொடர்ந்து இன்று ஞாயிறுக்கிழமை மீண்டும் 2 வது நாளாக தொடர்ந்து அந்த பகுதியில் காலை 9 மணி தொடக்கம் பகல் 2 மணிவரை ஏதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.
மருத்துவமனை அலட்சியம் குழந்தை பெற்ற பெண் மரணம்
மருத்துவமனை அலட்சியம் குழந்தை பெற்ற பெண் மரணம்
திருகோணமலை – பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த இளம் கர்ப்பிணித் தாயொருவர் வைத்திய சாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் (13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
24 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மூதூர் தள வைத்தியசாலையில் விசேட பெண் வைத்திய நிபுணர் குறித்த நாளில் வருகை தராமையால் மிகவும் ஆபத்தான முறையில் குழந்தையினை பிரசவித்ததன் பின்னர் அதீத குருதிப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குழந்தையும், தாயும் திருகோணமலை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரான்சில் சிறந்த சமையல்காரனாக தெரிவான தமிழர்
பிரான்சில் சிறந்த சமையல்காரனாக தெரிவான தமிழர்
பிரான்ஸ் பரிசில் இடம்பெற்ற உணவு தயாரிப்பாளார்கள் போட்டி நிகழ்வில் ,இலங்கையை சேர்ந்த தரசன் செல்வராஜா என்ற தமிழர் வெற்றியை பெற்று நான்காயிரம் யூரோ பணத்தை தட்டி சென்றுள்ளார் .
மேலும் இவர் பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகைக்கு, உணவுகளை வழங்குவதற்கும் ,அனுமதிக்க பட்டுள்ளார் .
தான் தயாரிக்கும் உணவுகளை பிரான்ஸ் ஜனாதிபதி சுவைப்பராயின் ,
அதைவிட மகிழ்ச்சி வேறு ஏதும் இல்லை என அவர் தெரிவித்து ,மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்துளளார் ,
செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள் ,அதனை ரசித்து ருசித்து செய்த,
கொள்கையால் இன்று ,பிரான்சில் சிற்றுண்டி சாலைகளின் உணவுகள் தயாரிப்பில்,முதலிடம் பிடித்து சாதனை படைத்து, தான் பிறந்த நாட்டுக்கு,
பெருமை சேர்த்துள்ளார் இந்த தமிழன் .
இஸ்ரேல் விரைவில் அழியும் ஈரான் இராணுவம் சூளுரை
இஸ்ரேல் விரைவில் அழியும் ஈரான் இராணுவம் சூளுரை
இஸ்ரேல் விரைவில் அழியும் என ஈரான் இராணுவம் சூளுரை ,
விரைவில் கூட்டு தாக்குதல் நடத்த படும் என எச்சரிக்கை ,
ரஷ்ய போர் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்தல் உக்ரைன் அதிரடி
ரஷ்ய போர் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்தல் உக்ரைன் அதிரடி
உக்ரேனிய எல்லைக்கு அருகில் பறந்து கொண்டிருந்த
ரஷ்ய போர் விமானங்கள் இரண்டு மற்றும் இரண்டு இராணுவ ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
Su-34 போர் விமானம் , Su-35 போர் விமானம் ,
இரண்டு Mi-8 ஹெலிகாப்டர்கள் என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ள
காட்சிகளை உக்கிரைன் வெளியிட்டு அதிரடியை காண்பித்துள்ளது .
ரஷ்ய போர் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்தல் உக்ரைன் அதிரடி
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணை கொண்டு உக்ரைன்
படைகள் புதிய தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
கடந்த 48 மணித்தியாலத்தில் மட்டும் ,ரஸ்யாவின்,
40 விமானங்கள் வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது ,
தற்கொலை விமானங்கள் டசின் கணக்கில் சுட்டு வீழ்த்த .பட்டுள்ளன.
மதத்தின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பாதிரியார் 600 பேர் பலி
மதத்தின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பாதிரியார் 600 பேர் பலி
கென்யாவில் டூம்ஸ்டே வழிபாட்டுடன் தொடர்புடைய இறப்பு எண்ணிக்கை
உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
பட்டினி இருங்கள் கடவுளை சநதிக்கலாம் என பாதிரியார் கூறியதால் ,
அதனை ,நம்பி மக்கள் பட்டினி கிடந்தது இறந்துள்ளனர் .
இறந்தவர்கள் சடலங்கள் யாவும் கடற்கரை பகுதியில் ,
புதைக்க பட்டுள்ளன நிலையில் மீட்க பட்டுள்ளது .
பட்டினி கிடந்த மக்களை ,கழுத்தை நெரித்தும் ,கூரிய ஆயுதங்களினால்
தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
மதத்தின் பெயரால் மக்களை பட்டினி போட்டு கொன்ற பாதிரியார் 600 பேர் பலி
இதுவரை 201 சடலங்க மீட்க பட்டுள்ளன .மேலும் 600 பேர் வரை காணாமல் போயுள்ளனர் .
இவர்களும் இவ்விதம் இறந்திருக்கலாமென நம்ப படுகிறது .
தொடர்ந்து இராணுவத்தின் ஆதரவுடன் தேடுதல் பணிகள் முடுக்கிவிட பட்டுள்ளன .
இயேசுவைச் சந்திப்பதற்காக கூட்டத்தாரை பட்டினி கிடக்கும்படி அவர் கட்டளையிட்ட்டு
இவ்விதம் படுகொலை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மெக்கன்சி, தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை பதிவு செய்ய பட்டுள்ளன .
இஸ்ரேலை உடைத்தெறிந்த ஏவுகணை விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலை உடைத்தெறிந்த ஏவுகணை விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலை உடைத்தெறிந்த ஏவுகணை ,விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
பழிவாங்கிய பலஸ்தீன போராளிகள் ,
எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்
எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்
எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்ஈரானின் கடற்படை, நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள,பாரசீக வளைகுடா கடல் பகுதியில் 3,412 மில்லியன் லிட்டர் ,கடத்தல் எரிபொருளை கடத்தி சென்ற கப்பலை மடக்கி பிடித்து கைப்பற்றியுள்ளது.
IRGC கடற்படையின் 2வது மாவட்டத்தின் மக்கள் தொடர்புத் துறை சனிக்கிழமை ஒரு அறிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு சுமார் $15 மில்லியன் மதிப்புடையது என்று கூறியது.
எண்ணெய் கடத்தல் கப்பலை மடக்கி பிடித்த ஈரான்
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சரக்கு தேசிய ஈரானிய எண்ணெய் பொருட்கள் விநியோக நிறுவனத்தின் உள்ளூர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் மானிய விலையில் வழங்கப்படும் எரிபொருள், கடத்தல்காரர்களுக்கு பெரும் நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
எவ்வாறாயினும், ஈரான், 2019 நவம்பரில் மீண்டும் எரிபொருள் அட்டைகள் மற்றும் ரேஷன் பெட்ரோல் ஆகியவற்றைப் பயன்படுத்தியது, இது கடத்தலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் ஒரு பகுதியாகும் என ஈரான் தெரிவித்துள்ளது .
துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா
துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா
துருக்கிய தேர்தல் ஆளும் எர்டாகோன் வீடு செல்லவரா இல்லையா என்பதை தீர்மானிக்கும் தேர்தல் இடம்பெறுகிறது ,
இருபது ஆண்டுகளாக துருக்கிய மண்ணில் பெரும் ,
ஆராயக்கத்தை புரிந்து வரும் நபராக இவர் விளங்கி வருகிறார் ,
சிரியா மற்றும் குருதீஸ்தான் மீதான படை எடுப்பு ,
அதனால் அந்த மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
மேலும் ஐரோப்பிய யூனியனில் சில நாடுகள் இணைவதற்கு,
இவர் தடையாக விளங்கினார் ,
நில நடுக்கத்தில் பலியான மக்களுக்கும் உரிய தீர்வு வழங்காமை என,
பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் இவர் மீது வைக்க பட்டுள்ளது .
துருக்கிய தேர்தலில் சர்வாதிகாரி வீடு செல்வாரா 20 வருட ஆட்சி முடிக்கு வருமா
அவ்வாறான நிலையில் இடம்பெறும் இந்த தேர்தல்,
ஆளும் எடகோன் சர்வாதிகாரம் முடிவுக்கு
கொண்டுவரப் பட்டு அவர் வீட்டுக்கு அனுப்ப படுவார்
என்றே எதிர் பார்க்க படுகிறது .
ஐரோப்பாவில் பல நாடுகளும் ,இவர் வீடு செல்வதையே விரும்புகின்றன .
வெல்ல போவது யார் ..? நாளை மறுநாள் தெரிய வரும் .
இலங்கையின் விமான சேவைக்கு 525 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு
இலங்கையின் விமான சேவைக்கு 525 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு
பண நெருக்கடியில் உள்ள இலங்கையின் தேசிய விமான நிறுவனம்
நேற்று 525 மில்லியன் அமெரிக்க டொலர் வருடாந்த இழப்பை சந்தித்துள்ளதாக அறிவித்தது.
ஏறக்குறைய 6,000 ஊழியர்களைக் கொண்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்,
வரவு செலவுத் திட்டத்தை வடிகட்டியுள்ள மற்றும் இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான நிதி நெருக்கடியை அதிகப்படுத்திய பணக்கஷ்டமான அரச நிறுவனங்களில் ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது .
மார்ச் 2022 வரையிலான ஆண்டில், கேரியர் 163.58 பில்லியன் ரூபாயை (525 மில்லியன் அமெரிக்க டாலர்) இழந்தது, அது ஒரு அறிக்கையில் கூறியது – முந்தைய 12 மாதங்களில், கோவிட் -19 தொற்றுநோயால் விமானப் பயணம் பாதிக்கப்பட்டபோது அதன் பற்றாக்குறையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
இலங்கையின் விமான சேவைக்கு 525 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பு
அந்நியச் செலாவணி தீர்ந்துவிட்டதால் அரசாங்கமே அதன் இறையாண்மைக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறிய எட்டு மாதங்களுக்குப் பிறகு, டிசம்பரில் 175 மில்லியன் அமெரிக்க டாலர் பத்திரத்திற்கான வட்டித் தொகையை விமான நிறுவனம் செலுத்த தவறி விட்டது.
இலங்கை விமான சேவை உள்ளிட்டவை பல மில்லியன் இழப்பை சந்தித்து வருவதாக ஆளும் அரசுகள் கணக்கை காண்பித்து பணத்தை ஆட்டையை போட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
மகிந்த மகனுக்கு மக்கள் மீது வந்த திடீர் காதல்
மகிந்த மகனுக்கு மக்கள் மீது வந்த திடீர் காதல்
மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்சவுக்கு மக்கள் மீது திடீர் காதல் வந்துள்ளது .
இலங்கையில் பல நிறுவனங்களில் பல நல்ல கொள்கைகள் இருந்தாலும், அவற்றை நடைமுறை படுத்த முடியாமல் போகிறது .
அதற்கு காரணம் ஆட்சிகள் மாறும் பொழுது ,அமைச்சர்கள் மாறுகின்றார்கள் ,அதனால் அவர்களினால் அதனைஸ் செயல் படுத்த முடியமால் போகிறது .
எனேவ தான் மக்களுக்கு கிடைக்க பெற வேண்டிய பல விடயங்கள் தடை பட்டு போகின்றன ,மக்கள் சிறப்பாக வாழ வேண்டுமாகின் ,அமைச்சர்கள் ஆட்சிகள் மாறினாலும் ,நிரந்தரமாக இருக்க வேண்டும் என்பது ,வாய்மை தவறாத இலங்கை இளம் அரசியல்வாதியின் பேச்சாக உள்ளது .















































