மண்மேடு சரிந்து இளைஞர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

மண்மேடு சரிந்து இளைஞர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்து இளைஞர் உயிரிழப்பு

மண்மேடு சரிந்து இளைஞர் உயிரிழப்பு ,பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரவளை கல்வள பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(23) மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் 31 வயதான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

பண்டாரவளை பூனாகல வீதி கல்வளப் பகுதியில் புதிய வீடு நிர்மாணிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தபோது 31 வயதான ஓரு பிள்ளையின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் மண்ணாகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த நபர் மீது பாரிய மண்மேடு சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

சக ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு மேல் மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவ்வேளையி​லே அவர் உயிரிழந்து உள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்த பண்டாரவளை பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதோடு. மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட உள்ளதாக பண்டாரவளை பொலிசார் தெரிவித்தனர்.

இலங்கையில் மரணதண்டனை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் மரணதண்டனை

இலங்கையில் மரணதண்டனை

இலங்கையில் மரணதண்டனை ,இலங்கையில் மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார விளக்கமளித்துள்ளார்.

அதன்படி, நாட்டின் நாட்டில் மரணதண்டனை நிறைவேற்றம் குறித்து எந்த சூழ்நிலையிலும் அரசாங்கம் ஆராயவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரித்தபோதே நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனையை நிறைவேற்றுவது ஒரு வழிமுறையில்லை என்பது குறித்துத் தெளிவாகவுள்ளார்.

நீதிமன்ற கொலையின் பின்னர் இது குறித்து ஆராயவில்லை.

தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வை காண்பதற்கு நாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், மூலோபாயம் ஒன்றை வகுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

நீதிமன்றம் தொடர்ந்தும் மரணதண்டனை தீர்ப்பினை வழங்குகின்ற போதிலும் இலங்கை 1976ஆம் ஆண்டுமுதல் மரணதண்டனையை நிறைவேற்றுவதை இடை நிறுத்தி வைத்துள்ளது என்றார்.

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்
Posted in இலங்கை செய்திகள்

4 நாட்களில் 8 கொலைகள்

4 நாட்களில் 8 கொலைகள்

4 நாட்களில் 8 கொலைகள் ,நாட்டில் 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்த கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையே என எதிர்க்கட்சித் தலைவர்

சஜித் பிரேமதாச மீண்டும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (24) விசேட கூற்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்ததார்.அவர் மேலும் கூறுகையில்

கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. தேசிய பாதுகாப்புக்கு இது பெரும் பிரச்சினையாக அமைந்திருந்தாலும், அது ஒரு பிரச்சினையல்ல என ஜனாதிபதி

குறிப்பிட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையே இடம்பெற்று வரும் இந்த கொலைக் கலாசாரம் தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையாகவே காணப்படுகிறது.

அண்மைய தினத்தில் நீதிமன்றத்தினுள் நடந்த மிலேச்சத்தனமான கொலையுடன் தொடர்புடைய பெண்ணின் வண்ணப் புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்கள் புலனாய்வு தரப்பிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இது தொடர்பிலான புலனாய்வு அறிக்கைகளை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டன. குறித்த கொலை தொடர்பிலான தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றிருந்தன.

இவ்வாறு தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தும் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டமை குறித்து தெளிவான விளக்கம் இங்கு வழங்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

25 வது கழிப்பறை கையளிப்பு |அசத்திய வன்னி மைந்தன் டிக் டாக் தளம் | வாணன் வாணன் பிரான்ஸ்
Posted in வன்னி மைந்தன் உதவி வாணன் பாடல்கள்

25 வது கழிப்பறை கையளிப்பு |அசத்திய வன்னி மைந்தன் டிக் டாக் தளம் | வாணன் வாணன் பிரான்ஸ்

25 வது கழிப்பறை கையளிப்பு |அசத்திய வன்னி மைந்தன் டிக் டாக் தளம் | வாணன் வாணன் பிரான்ஸ்

25 வது கழிப்பறை கையளிப்பு |அசத்திய வன்னி மைந்தன் டிக் டாக் தளம் | வாணன் வாணன் பிரான்ஸ்

video

இந்திய மீனவர்கள் மீண்டும் கைது
Posted in இலங்கை செய்திகள்

32 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

32 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

32 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல் ,இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை

விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவானால் ஞாயிற்றுக்கிழமை (23) உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில்

தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (23) அதிகாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்ட குறித்த 32 இந்திய மீனவர்களும் கடற்படையின் விசாரணைகளின் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்ட நிலையில்

மேலதிக விசாரணைகளின் பின்னர் 32 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 மீனவர்களையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் மீட்க இந்திய மத்திய அரசு உடனடி நடவடிக்கையை

மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தனது பிறந்த நாளில் குடும்பம் ஒன்றை மகிழ்வித்த நோர்வே யமேலா அக்கா |கழிப்பறை 21
Posted in வன்னி மைந்தன் உதவி

தனது பிறந்த நாளில் குடும்பம் ஒன்றை மகிழ்வித்த நோர்வே யமேலா அக்கா |கழிப்பறை 21

தனது பிறந்த நாளில் குடும்பம் ஒன்றை மகிழ்வித்த நோர்வே யமேலா அக்கா |கழிப்பறை 21

தனது பிறந்த நாளில் குடும்பம் ஒன்றை மகிழ்வித்த நோர்வே யமேலா அக்கா |கழிப்பறை 21

video

20 வது மலசலகூடம் கையளிப்பு |வன்னிமைந்தன் உதவித்திட்டம் | நன்றி அமரர் தவராசா அண்ணா குடும்பம் லண்டன்
Posted in வன்னி மைந்தன் உதவி

20 வது மலசலகூடம் கையளிப்பு |வன்னிமைந்தன் உதவித்திட்டம் | நன்றி அமரர் தவராசா அண்ணா குடும்பம் லண்டன்

20 வது மலசலகூடம் கையளிப்பு |வன்னிமைந்தன் உதவித்திட்டம் | நன்றி அமரர் தவராசா அண்ணா குடும்பம் லண்டன்

20 வது மலசலகூடம் கையளிப்பு |வன்னிமைந்தன் உதவித்திட்டம் | நன்றி அமரர் தவராசா அண்ணா குடும்பம் லண்டன்

video

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கொலையாளி குறித்து அடுத்தடுத்து வெளிவரும் செய்திகள்

கொலையாளி குறித்து அடுத்தடுத்து வெளிவரும் செய்திகள்

கொலையாளி குறித்து அடுத்தடுத்து வெளிவரும் செய்திகள் ,கனேமுல்ல சஞ்சீவ கொலையின் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டு வருகின்றனர்.

அவர் தொடர்பாக சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க,

புத்தளம் பாலாவி பகுதியில் கைது செய்யப்பட்ட இந்த நபர் பல பெயர்களில் தோன்றியவர் என்று தெரிவித்தார்.

அவரிடம் பல அடையாள அட்டைகள் இருப்பதாகவும், அதில் ஒன்றில் சட்டத்தரணியாக பணிபுரிவதைக் குறிக்க தயாரிக்கப்பட்ட சட்டத்தரணி அடையாள அட்டையும் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

அவர் முதலில் மொஹமட் அஸ்மன் ஷெரிப்தீன் என்ற பெயரிலும், பின்னர் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தனராச்சி என்ற பெயரைப் பயன்படுத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கொடிகாரகே கசுன் பிரபாத் நிஸ்ஸங்க என்ற பெயரைக் கொண்ட போலியான சட்டத்தரணி அடையாள அட்டையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன்படி, எதிர்கால விசாரணைகளில், இந்த சந்தேக நபர் மற்றும் கனேமுல்ல சஞ்சீவவின் கொலையில் அவருக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த அனைவரையும் பற்றிய உண்மையான தகவல்களை வெளிக்கொணர முடியும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டின் பின்னர் துப்பாக்கிதாரியும், அவருக்கு உதவிய பெண் குறித்த செய்தியும் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது

டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா
Posted in உலக செய்திகள்

டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா

டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா

டில்லி முதல்வராகிறார் ரேகா குப்தா ,டில்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்கிறார்.

டில்லியின் பா.ஜ.க. முதல்வரை முடிவு செய்ய, அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. இதில் பா.ஜ.கவின் 48 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.

இதில் டில்லியின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

டில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவா அவர்களை வரவேற்றார்.

தொடர்ந்து டில்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா அறிவிக்கப்பட்டார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தற்போது பெண் முதல்வர்கள் எவருமே இல்லை.

இதனால், எதிர்கட்சிகளின் மிகவும் முக்கியத் தலைவரான மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பதிலளிக்கும் வகையில் டில்லியின் முதல்வராக ஒரு பெண் அமரும் வாய்ப்புகளும் உள்ளன என தெரிவிக்கப்பட்டது . அது தற்போது உறுதியாகி உள்ளது.

டில்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு துணைநிலை ஆளுநர் புதிய முதல்வர் ரேகா குப்தாவுக்கு பதவி ஏற்பு செய்து வைக்கிறார். இவருடன் புதிய அமைச்சர்களும் இதே மேடையில் பதவி ஏற்க உள்ளனர்.

இதில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்கள், திரை நட்சத்திரங்களுடன் முக்கியத் துறவிகளும் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. டில்லியின் 70 சட்டப்பேரவை தொகுதிகளில் பா.ஜ.க. 48, ஆம் ஆத்மி 22 இடங்களை பெற்றிருந்தன.

டில்லியின் அடுத்த முதல்வராக டெல்லி பா.ஜ.கவின் பல்வேறு முக்கிய தலைவர்களின் பெயர்கள் சொல்லப்பட்டன. இந்த நிலையில் ரேகா குப்தா முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்

தமிழக மீனவர்கள் பன்னிருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

நெடுந்தீவில் ஆறு மீனவர்கள் கைது

நெடுந்தீவில் ஆறு மீனவர்கள் கைது

நெடுந்தீவில் ஆறு மீனவர்கள் கைது ,யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே இன்று இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் இரண்டு படகையும் அதிலிருந்த ஆறு மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டிக்கு அழைத்து வந்து விசாரணைகளுக்கு பின்னர் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்
Posted in இலங்கை செய்திகள்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண்

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய பெண் ,கனேமுல்ல சஞ்சீவ கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய, பெண் சந்தேக நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

பெயர்:- இஷாரா செவ்வந்தி
வயது: – 25 ஆண்டுகள்
அடையாள அட்டை – 995892480
முகவரி:- 243/01, நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தை, கட்டுவெல்லேகம.

குறித்த பெண் தொடர்பான தகவல்களை கொழும்பு குற்ற விசாரணைப்பிரிவின் பணிப்பாளரின் அலைபேசி இலக்கமான 071 – 8591727 அல்லது பொறுப்பதிகாரியின் 071 – 8591735 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பெண் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்க தயாராக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தகவல் வழங்குவோரின் அடையாளம் பாதுகாக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது

சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது

சொகுசு வாகனங்களை வாடகைக்கு வாங்கி விற்றவர் கைது ,சுமார் 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்து மற்றவர்களுக்கு விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவ்வாறு விற்கப்பட்ட 30 வாகனங்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர், வாடகைக்கு வாகனங்களை வழங்கும் சேவைகளை அணுகி, போலி நிறுவனத்தின் பெயரில் ஆவணங்களை வழங்கி சொகுசு வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளார்.

அத்துடன், தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலைக்கு அந்த வாகனங்களை மற்றவர்களுக்கு விற்றதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் அதுருகிரிய பகுதியில் வசிப்பவர் என்றும், அவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சொகுசு வாகனங்களை நிறுத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.

குறித்த நபர், ரூ. 25 மில்லியன் மதிப்புள்ள வாகனத்தை ரூ. 20 மில்லியனுக்கு விற்பனை செய்து வாகன உரிமை ஆவணங்கள் விற்பனைக்குப் பிறகு சில நாட்களில் ஒப்படைக்கப்படும் என்று கூறி தனிநபர்களை ஏமாற்றியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

கணவனுக்கு ஐஸ் மனைவி கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலையாளியை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் கைது

கொலையாளியை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் கைது

கொலையாளியை அழைத்துச் சென்ற வேன் ஓட்டுநர் கைதுகணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல உதவிய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பாராளுமன்றத்தில் இதனை இன்று (20) தெரிவித்தார்.

புது ,க்கடை நீதிமன்றத்தில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டார்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பிரதான சந்தேக நபர் நேற்று (19) புத்தளம் பாலவி பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில், சட்டத்தரணி போல வேடமணிந்து வந்து கொலையாளிக்கு
உதவிய பெண் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தா

இளநீர் விலை 300 ஐ தாண்டியது
Posted in இலங்கை செய்திகள்

இளநீர் விலை 300 ஐ தாண்டியது

இளநீர் விலை 300 ஐ தாண்டியது

இளநீர் விலை 300 ஐ தாண்டியது ,கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இளநீர் விலை கடந்த நாட்களில் 300 ரூபாயைத் தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிய அளவிலான இளநீர் 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக இளநீருக்கான தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு காரணமாகும்.

இதற்கிடையில், சந்தையில் ஒரு தேங்காய் விலை 200 ரூபாயைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை

இஸ்ரேலை தாக்குவோம் ஈரான்கடும் மிரட்டல் |ஈரான் புதிய ஏவுகணை சோதனை

video

இவன் துரோகி அடித்து விட்டார் ஐயா |கொளுத்தி போட்டார் வசூல் ராஜா |Vanni mainthan
Posted in உலக செய்திகள்

இவன் துரோகி அடித்து விட்டார் ஐயா |கொளுத்தி போட்டார் வசூல் ராஜா |Vanni mainthan

இவன் துரோகி அடித்து விட்டார் ஐயா |கொளுத்தி போட்டார் வசூல் ராஜா |Vanni mainthan

இவன் துரோகி அடித்து விட்டார் ஐயா |கொளுத்தி போட்டார் வசூல் ராஜா |Vanni mainthan

video

NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு சிக்கல்

உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு சிக்கல்

உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்போருக்கு சிக்கல் செவ்வாய்க்கிழமை (18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் உணவு வகைகளின் விலைகள் திடீரென அதிகரிக்குமாறு கோருகின்ற சங்கங்களின்

சட்டத் தன்மை தொடர்பில் ஆராயப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதாகவும் திடீரென உணவுப் பொருட்களின் விலையை அதிகரிக்க முடியாது எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த முறை அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பாதீட்டில் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு நிவாரணம் வழங்கப்படாமையினால் தேநீர், பால் தேநீர் உள்ளிட்டவற்றின் விலையை

அதிகரிப்பதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை (18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த உணவு வகைகளின் விலையை அதிகரிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

உப்பு, தேங்காய், முட்டை, கோழி இறைச்சி உள்ளிட்டவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இதனால் தங்களது தொழிற்துறை வெகுவாக பாதிப்படைவதாகவும் அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்

காத்திருக்கும் அமைச்சர் சந்திரசேகர்
Posted in இலங்கை செய்திகள்

காத்திருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

காத்திருக்கும் அமைச்சர் சந்திரசேகர்

காத்திருக்கும் அமைச்சர் சந்திரசேகர் ,கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கண் சிகிச்சைக்காக, புதன்கிழமை (19) சென்றிருந்தார்.

நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பிறகு வைத்தியரை அவர் சந்தித்தார்.

அமைச்சராக இருந்த போதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் மரணம்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் மரணம்

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிறுவன் மரணம் ,மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (19) அவர் உயிரிழந்தார்.

மித்தெனிய, கடேவத்த சந்தி பகுதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் குழுவொன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டையடுத்து, நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார், அவரது மகனும் மகளும் காயமடைந்தனர்.

பின்னர் தங்காலை மற்றும் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மகள் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு T-56 துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கணவனுக்கு ஐஸ் மனைவி கைது
Posted in இலங்கை செய்திகள்

கணவனுக்கு ஐஸ் மனைவி கைது

கணவனுக்கு ஐஸ் மனைவி கைது

கணவனுக்கு ஐஸ் மனைவி கைது ,சிறையிலிருக்கும் தனது கணவனுக்கு கொடுப்பதற்காக உணவுடன் ஒரு கிராம் ஜஸ் போதைப் பொருளை சூட்சுமமாக மறைத்து கொண்டு சென்ற குறித்த சந்தேக நபரின் மனைவியை

செவ்வாய்க்கிழமை மாலை (18) சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜி.கஜநாயக்க தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் ஜஸ் போதைப் பொருளுடன் கைது

செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவுக்கு அமைய மட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கணவனை பார்ப்பதற்காக உணவு மற்றும் புகையிலைகளை மனைவி எடுத்துச் சென்றுள்ளார். அவைகளை சிறைச்சாலை அதிகாரிகள் சோதனையிட்ட போது

புகையிலைக்குள் சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டதுடன் குறித்த பெண்ணை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஓட்டமாவடி 3ஆம் பிரிவு உசேனியா வீதியைச் சேர்ந்த 27 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்