இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

Spread the love

இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

இலங்கையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த பதின் ஐந்து இலங்கையர்கள் அவுஸ்ரேலியா அரசினால் இலங்கைக்கு மீள நாடு கடத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

இலங்கையில் இருந்து படகுமூலம் பயணித்த இலங்கை அகதிகள் படகு அவுஸ்ரேலிய கடற்கரையில் இயந்திரக்கோளாறால் பழுதடைந்த நிலையில் அவுஸ்ரேலியா கடல் படையினரால கைது செய்ய பட்டு நாடு கடத்த பட்டுள்ளனர்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரசுடன் அவுஸ்ரேலியா அரசு மிக நெருங்கிய உறவை பேணி வருகிறது ,அதன் ஊடாக இவ்வாறான நாடு கடத்தலை துரித படுத்தியும் வருகிறது

அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக செல்பவர்களை கிறிஸ்ம்ஸ தீவில் அடைத்து வைத்து கொடுமை படுத்தும் அவுஸ்ரேலியா அரசின் மனித உரிமை மீறல் நிலை தொடர்கிறது

அவுஸ்ரேலியா அரசின் இந்த கொடுமை படுத்தல் விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இலங்கை மக்கள் தொடராக ஆபத்து நிறைந்த கடல் வழி ஊடாக பயணித்து வருகின்றமை தொடர்கிறது

இலங்கையில் உள் நாட்டு போர் முடிவடைந்த பின்னர் வெளி நாடுகளில்அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்க பட்டு வருகிறது

இலங்கையில் இலங்கையர்களுக்கு பிரச்சனை இல்லை நீங்கள் நாட்டுக்கு செல்லுங்கள் என அரசுகள் கையை விரித்து விடுகின்றன ,இதனால் விசா இன்றி மக்கள் அவதி படுகினறனர்

வந்த நாடுகளில் விசா இன்றி வேலை செய்ய முடியாது இலங்கையர்கள் அவதியுறும் சொல்லென்னா துயரை புரிந்து கொள்ளாமல் இவ்வாறான சட்டவிரோத பயணங்கள் தொடந்த வண்ணம் உள்ளது

இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

இலங்கையர்கள் நாடு கடத்திய அவுஸ்ரேலியா அரசின் இந்த செயலுக்கு மனித உரிமை மையங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

அவுஸ்ரேலியா அரசினால் இலங்கையர்கள் கைகள் கட்ட பட்டு விமானம் மூலம் கிரிமினல் குற்றவாளிகள் போல மக்கள் நாடு கடத்த பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன

வெளிநாடு நோக்கி செல்லும் இலங்கையர்கள் ஏன் இங்கு செல்கிறோம் போலீசாரிடம் சிக்கிய பொழுது பணம் உழைக்க வருகை தந்தாக ஊடகங்களுக்கு செய்திகள் வழங்கினர்

இவர்கள் செயல் தம்மை தாமே கேவல படுத்தி கொண்ட செயலினால் இவர்களுக்கு நாட்டில் உயிர் ஆபத்து இல்லை அதனால் வேலை தேடியும் நல்ல வாழ்க்கை தேடியும் வந்தனர் என கூறி காட்சிகளை ஊடகங்கள் இழிநிலையோடு ஒளிபரப்பி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

ஆள் வளர்ந்தது தான் மிச்சம் அறிவு இல்லை என்பது இதைத்தான் போலும் .

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply