இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க

இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க
Spread the love

இட்லி தோசைக்கு இந்த சட்னி செஞ்சா ரெம்பவே சாப்பிடுவாங்க

வீட்டில இட்லி தோசைக்கு ஏற்ப சுவையாக ,இந்த சட்னி செஞ்சா ,ரெம்பவே கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .


அப்படியான மிக தரமான சுவையான ,இலகுவான முறையில இந்த சட்னி செய்திடலாம் .

அவ்வாறான இந்த சட்னி செய்வது எப்படி என்பதை ,இதில் பார்க்கலாம் வாங்க .

கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி -செய்முறை ஒன்று

அடுப்பில சட்டியை வைத்து என்னை ஊற்றி கொள்ளுங்க .எண்ணெய் சூடானதும் .நான்கு பல்லு பூண்டு ,கூடவே இஞ்சி ,காரத்திற்கு ஏற்ப ஐந்து பச்சை மிளகாய் சேர்த்து ,இப்போ இவற்றை ஒருநிமிடம் அப்படியே வதக்கி வாங்க .

அதன் பின்னர் அரைக் கரண்டி சீரகம் ,அரை கப் அளவு பொட்டுக் கடலை சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .

அப்புறம் வெட்டி வைத்த தேங்காய் துண்டுகளை சேர்த்திடுங்க .இரண்டு நிமிடம் வேறுபட்ட பின்னர் ,கொஞ்ச புளி சேர்த்து ஒரு நிமிடம் வரை வறுத்து வாங்க .


நன்றாக வறு பட்டதும் அடுப்பை அணைத்து ,அதனை எடுத்திடுங்க .

சட்னி செய்முறை இரண்டு

சூடு ஆறினதும் அதனை மிக்சியில் போட்டு ஒன்றரை கப் அளவுக்கு கொத்தை மல்லி இலை,கூடவே ஒரு கரண்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுங்க .

நன்றாக அரைத்து எடுத்ததிடுங்க .இப்போ சட்னி ரெடியாகிடிச்சு ,இதற்கு தாளித்து சிலது சேர்த்தால் ,சாப்பிடும் பொழுது சுவை வேற லெவலாக இருக்கும் .

கருவேப்பிலை ,கடுகு,உளுத்தம் பருப்பு ,பெருங்காய தூள் ,போட்டு தாளித்து எடுத்து இது கூட கலந்திருங்க .

அவ்வளவு தாங்க வேலை .

இப்போ இதனை தோசை ,இட்லி சாதம் பாராட்டோ கூட சேர்த்து ,ஒரு புடி புடிச்சா ,மாப்புள்ள செமயா ஏறி போகும் யா .

அம்புட்டு சுவையாக இருக்கும் ,நாள் தோறும் செஞ்சு அசத்துங்க மக்களே .

Leave a Reply