அரச அதிகாரிகள் மீது தாக்குதல்

அரச அதிகாரிகள் மீது தாக்குதல்
Spread the love

அரச அதிகாரிகள் மீது தாக்குதல்

அரச அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

குருநாகல் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை சோதனை செய்யச் சென்ற நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகள் இருவர் மீது, அந்த கடையில் நின்றவர்கள் திடீர் தாக்குதலை நடத்தி இருக்கிறனர் .

இந்த தாக்குதல் குறித்து வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் .மற்றும் அவரது மகன் ஆகியோர் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட வர்த்தகநிலையத்தில் உரிமையாளர் தற்போது சேவையில் இருக்கும் காவல்துறை அதிகாரி என காவல்துறையினர் தெரிவித்த வருகின்றனர் .

இங்கு உள்ள கடையில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக .கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து ,சோதனை நடத்த சென்ற பொழுது, இந்த காவல்துறை அதிகாரி திடீர் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

காவல்துறையில் இருப்பவர்களே நாட்டினுடைய சட்ட திட்டங்களை மதிக்காது, தான் தோன்றி த்தனமாக ஈடுபட்டு, மக்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை ,விற்பனை செய்வது எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியுமென மக்கள் மன்றம் கேள்வி எழுப்பி நிக்கிறது .

இந்த விடயம் பெரும் அச்சமடைய வைத்துள்ள செயற்பாடாக பார்க்கப்படுகிறது.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்பதையும் ,மக்களும் அந்த சட்டங்களை கடைப்பிடிக்க மறுத்து வருகின்றனர் என்பதையும், அரச அதிகாரிகளும் அதனை கடைப்பிடிக்க மறுக்கின்றனர் என்பதையும்

இந்த கடையினுடைய உரிமையாளராக காவல்துறை அதிகாரி செயல்படும் அவர்கள் அரசு அதிகாரியை தாக்கியதிலிருந்து காண முடிகிறது.