அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்
பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், சல்லார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் தயாராகின்றன. இதில் சல்லார் திரைப்படத்தில்
ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இந்த வருடம் ஜனவரியில் ஸ்ருதி நடிப்பதை சல்லார் படக்குழு முறைப்படி அறிவித்தது.
தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் சல்லார் திரைப்படம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய
மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரேநேரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இது தயாராகிறது.
ஸ்ருதி ஹாசன் – பிரபாஸ்
இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் வேடம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் இதில்
அரசியல் நிருபராக நடிக்கிறார். இது மிக முக்கியமான வேடம் என்கிறது படக்குழு. சென்ற வருட
இறுதியில் சல்லார் திரைப்படம் தொடங்கியது. இந்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பை நடத்தினர்.
தற்போது ராதேஷ்யாம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் இருப்பதால் சல்லாரின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- சவுதி ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஹூதிகள் உரிமை
- அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய ஈரான் விரும்புகிறது டிரம்ப்
- போர் இடையூறுகள் காரணமாக மத்திய கிழக்கு வளர்ச்சி கணிப்பை ஐஎம்எஃப் குறைத்துள்ளது
- ஈரான் தலைமையை குறிவைப்பதில் அமெரிக்கா ‘வரம்பு மீறிவிட்டது’ என டிரம்ப் கூறுகிறார்.
- 9 மாதங்களில் 360-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை












