அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்

Spread the love

அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்

ஈராக்கில் இருந்து உடனடியாக அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈராக்கின் அதிபர் அடெல்

அப்துல்-மஹ்தி அமெரிக்கா செயலர் பொம்பியோவுக்கு தொலைபேசியில் கூறியுள்ளார் .

ஈராக்கிய பாராளுமன்றம் வழங்கிய கட்டளைக்கு இணங்க இராணுவத்தை ஈராக்கில் இருந்து விலக்கிடும்

பொறிமுறையை உருவாக்கி அதன் ஊடாக அங்கிருந்து அகற்றும் படி நேரடியாகவே தொலைபேசி மூலம் இடித்து உரைத்துளளார் .

ஈரான் விமான விபத்தை திசையை திருப்பி அமெரிக்கா அரசியல் செய்து வரும் நிலையில் அதனை புரிந்து கொண்ட

ஈராக்கிய அதிபர் தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இந்த விடயத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார் .

ஈராக்கில் உள்ள விமான தளங்களை நாம் புனரமைத்து நவீன மய படுத்தி விட்டோம் ,எனவே அதற்கு பல பில்லியன் டொலர்கள் செலவிட பட்டுள்ளது .

அதனை ஈராக் எமக்கு செலுத்தினால் நாம் அங்கிருந்து வெளியேறுவோம் என புதுக் கதையை அமெரிக்கா அவிழ்த்து விட்டுள்ளது .

இதன் உள்ளார்ந்த நோக்கம் நாம் அங்கிருந்து வெளியேற மாட்டோம் என்பதே .

அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்


அமெரிக்காவின் இந்த போக்கு ஈராக்கிற்கு சீற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த தொலைபேசி உரையாடல்

மூலம் திட்ட வட்டமாக தமது நிலை பாட்ட்டில் இறுக்கத்தோடு தெரிவித்துள்ளார் .

ஆளும் ஈராக்கிய அதிபரின் இந்த செயல் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில்

,அங்குள்ள அமெரிக்கா மற்றும் அதன் நேச நட்டு படைகள் இருப்பு கேள்வி குறியாகியுள்ளதுடன்

மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்காவின் பிடி தளரும் நிலை ஏற்பட்டுள்ளது .

எமது நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனின் எமது பிராந்தியத்தில் அமெரிக்கா படைகள் நிற்க லாகாது என

ஈரான் தொடர்ந்து கூறி வருவதுடன் எமது தாக்குதல் தொடரும் எனவும் அறிவித்துள்ளது .

சமாதானமாக செல்வோம் வாருங்கள், நிபந்தனையற்ற பேச்சுக்கு தாம் தயார் என அமெரிக்கா வாலாட்டி ஈரானிடம் பணிந்து செல்வதற்கு காரணம் ,மத்திய கிழக்கில் ஈரான்

,ரசியா பிடிகள் இறுக்கம் பெற போகின்றது என்பதும் ,தமது பொருளாதாரத்திற்கு இவை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதும் தான் .

2040 ஆண்டுக்கு பின்னரே ஐரோப்பாவில் எரிபொருள் வாகனங்கள் பாவனையில் இருந்து நீக்க படுகிறது, எனவே

எதிர் வரும் 20 ஆண்டுகளுக்கு எரிபொருள் தேவை ஐரோப்பாவுக்கு தேவை படுகிறது .

அதன் பின்னர் வேண்டும் எனின் அமெரிக்கா,மற்றும் நேட்டோ படைகள் இந்த மத்திய கிழக்கில் தமது போரை

தொடுத்து அந்த நாடுகளை இல்லாது அழிக்கும் செயலில் தீவிரமாக செயல் படும் என்பதே அரசியல் நிகழ்வுகளில் நிரலாக உள்ளது .

  • வன்னி மைந்தன் –
அமெரிக்காவே உடனே இராணுத்தை

Leave a Reply