லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை


இலங்கையில் -லஞ்சம் பெற்ற இரு பொலிஸ் அதிகரிகளுக்கு 28 வருடம் சிறை

இலங்கையில் – புத்தளம் பகுதியில் பணி புரிந்து வந்த கான்ஸடபிள்,மற்றும் இன்ஸபெக்டர் தர காவல்துறை

அதிகாரிகள் இருவர் பத்தாயிரம் ரூபா லஞ்சம் பெற்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டு வந்தனர் .

இந்த குற்ற சாட்டில் சிக்கிய இவர்களுக்கு சுமார் 28 வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .இலங்கை சட்டத்தின்

நான்கு பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது .

இந்த தீர்ப்பிலேயே இவ்வாறு 28 வருட சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது .

லஞ்சம் பெரும் அரச ஊழியர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதுடன் ,அவர்கள் பணியில் இருந்து நீக்க படுவதுடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் என

கோட்டா அதிரடியாக அறிவித்து ,இரகசிய போலீசார் 2500 பேரை காவல் பணியில் ஈடுபடுத்தியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது