ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா

Spread the love

ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா

சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்த நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுற்றுலா சென்று வந்த ரகுல் பிரீத் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு
ரகுல் பிரீத் சிங்
கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கி, பல்வேறு முன்னணி

நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொரோனாவுக்கான முன்னெச்சரிக்கை

நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு குடும்பத்தினருடன் மாலத்தீவுக்குச் சுற்றுலா சென்றுவிட்டுத்

திரும்பினார். தற்போது படப்பிடிப்புக்குச் செல்வதற்காக அவர் ஆயத்தமாகி வந்தார். இதனிடையே, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரகுல் பிரீத் சிங் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரகுல் பிரீத் சிங் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ரகுல் பிரீத் சிங்

“எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னை நானே

தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தற்போது நன்றாக இருக்கிறேன்.

நன்கு ஓய்வெடுத்த பின்பு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்வேன். என்னைச் சந்தித்த அனைவரும் கொரோனா

பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, பாதுகாப்பாக இருக்கவும்”.

இவ்வாறு ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *