யாழில் இருவர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்


யாழில் இருவர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்

சங்கானை தேவாலய வீதியில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபக் குடும்பத்தினர் மீது,

இனந்தெரியாதோரினால் வாள் வெட்டுக்கு தாக்குதலுக்கு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றது. அவர்கள் மீது தாக்குதல் நடத்திய வாளும் மீட்கப்பட்டுள்ளது

சம்பவத்தில் மார்க்கண்டு வேலாயுதம் (வயது -64), தங்கராஜா புவனேஸ்வரி ( வயது -56) ஆகிய இருவருமே தாக்குதலுக்கு

இலக்காகி வெட்டுக்காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் வசிக்கும் குடும்பத்தினரின் வீட்டை பராமரிக்கும் பணியில் இருவரும் அங்கு தங்கியிருந்தனர் என ஆரம்ப கட்ட

விசாரணைகளில் தெரியவந்ததாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை அவர்கள் தாக்கப்பட்டமைக்கான சரியான காரணம் கண்டறியப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்