படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா

இதனை SHARE பண்ணுங்க

படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா

பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனன், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்து இருக்கிறார்.

படப்பிடிப்பில் காயம் அடைந்த மாளவிகா மோகனன்


மாளவிகா மோகனன்
ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். விஜய்

ஜோடியாக மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனுஷ் ஜோடியாக மாறன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தியில் தயாராகும் யுத்ரா படத்திலும் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமாக

உருவாகி வரும் இதில் மாளவிகா மோகனனுக்கும் சண்டை காட்சிகள் உள்ளன.

மாளவிகா மோகனன் வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சியொன்றை மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்கினர்.

மாளவிகா

அப்போது அவருக்கு எதிர்பாராமல் அடிபட்டு கையில் காயம் ஏற்பட்டது‌. இதையடுத்து அவருக்கு

முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. கையில் காயம் பட்ட புகைப்படத்தை சமூக

வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply