மன்னித்து விடு
உன்னை அழைத்தேன் எந்தன் நாளில்
உன்னை காணவில்லை ..
உள்ளம் தேடி அழைத்த உந்தன்
உருகும் மன்றில் நானில்லை …..
எதையோ எண்ணி வரவை தொலைத்தாய் ..?
எனக்கு தெரியவில்லை – என்
எண்ணத்தில வலிகள் படர
எறிந்தேன் உன்னை தொடர …
அழைத்த குரலில் ஆமே என்றாய்
அட டா இது தான் பண்போ ..? – மன்றில்
ஆளை காண தேடி நின்றேன்
ஆழி பேரலை இதுவோ ..?
முன்னே புரிந்த உந்தன் ஊழி
முன்னே வைத்தேன் ஓடி ….
முன்னே தேடி கூட வந்தாய்
மூச்சிழந்தேன் வாடி ….
போலி ஊடல் வேண்டாம் வேண்டாம்
போயிடு போயிடு நன்றே ….
தேடி வந்தும் உறவு தேறா
தேட வேண்டாம் மண்ணே ….!
- வன்னி மைந்தன் -(ஜெகன்)
ஆக்கம் -27/01/2018 - வன்னி மைந்தன் கவிதைகள்