பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன்தாரா


பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்கி உள்ளார்.

பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கிய நயன்தாரா
நயன்தாரா


கொரோனா பாதிப்பால் திரைப்பட துறை முடங்கிப்போய் உள்ளது. திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த 25 ஆயிரம்

உறுப்பினர்களில், 18 ஆயிரம் பேர் தினக்கூலிகள். இவர்களுக்கு ரே‌‌ஷன் கார்டுகள் இல்லை. இதனால் அரசு அறிவித்த இலவச

பொருட்களையும், பணத்தையும் வாங்க முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே அவர்களுக்கு பெப்சி மூலமாகவோ அல்லது திரைப்பட நலவாரியம் மூலமாகவோ அரசு உதவி வழங்க வேண்டும் என்று

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி, பலர் உதவி செய்து வருகிறார்கள்.

தற்போது தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா பெப்சி தொழிலாளர்களுக்கு ரூபாய் 20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி
பெப்சி தொழிலாளர்களுக்கு நிதி