பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil
இதனை SHARE பண்ணுங்க

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம்.நம்ம வீடே மண மணக்க இப்படி செஞ்சு அசத்துங்க மக்களே .

நம்ம தமிழர்களில் அதிகாமானவர்கள் பிரியாணி செய்யிறாங்க ,ஆனால் கடையில் விற்பனை செய்வது போல அவர்களினால் பெற்று கொள்ள இயலவில்லை .

அது ஏன் .? அது தாங்க நம்ம சமையல் காலை நிபுணர் ,இப்படி செய்து அசத்துறாங்க.
அவங்க செய்வதை போல நீங்களும் செய்து அசத்துங்க .

எந்த அரிசியிலும் பிரியாணி செய்வது எப்படி …?
வாங்க மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை இதில் பார்க்கலாம் .

பிரியாணிகளில் , மட்டன் பிரியாணி ,முட்டை பிரியாணி ,மரக்கறி பிரியாணி ,சிக்கன் பிரியாணி என்பன உள்ளன .

இதில் மட்டன் பிரியாணி, அதிக மக்கள் விரும்பி உண்கிறாங்க .
அவ்வாறான மட்டன் பிரியாணி, எந்த அரிசியிலும், எப்படி செய்வது என்பதை இதில் பார்க்கலாம் வாங்க .

பிரியாணி எந்த அரிசியிலும் இப்டி சுவையா செய்யலாம் செஞ்சு அசத்துங்க samayal tamil

செய்முறை ஒன்று .

முதல்ல இந்த மட்டன் பிரியாணி செய்து கொள்ள ,குக்கர் சூடு படுத்தி கொள்ளுங்க .அதில எண்ணெய் ,நெய் சேர்த்திருங்க .

நெய் நன்றாக உருகியதன் பின்னர் .கரம் மசலா ,ஒரு பட்டை ,ஒரு நட்ச்சத்திர சோம்பு ,ஒரு பிரியாணி இலை ,இரண்டு கராம்பு ,அரை கரண்டி ஏலாக்காய் தூள் ,என்பன சேர்த்து கொள்ளுங்க .

30 செக்கனில் நன்றாக வதக்கிய பின்னர் .வெட்டி வைத்த இரண்டு வெங்காயத்தை போட்டு கொள்ளுங்க .

வெங்காயம் கலர் மாறி வரும் வரை ,நன்றாக வதக்கி வாங்க .தங்க கலருக்கு வெங்காயம் வந்த பின்னர் ,நாம ஒருகரண்டி இஞ்சி ,இரண்டு பச்சை மிளகாய்,சேர்த்து வதக்கிடுங்க .


அப்புறம் பொடியாக வெட்டிய கொத்த மல்லி,கூடவே புதினா இலை சேர்த்திடுங்க .இரண்டையும் நனறாக சேர்த்து வதக்கி வாங்க .

அப்புறம் பொடியாக வெட்டி வைத்த தக்காளி சேர்த்திடுங்க .கூடவே தேவையான உப்பு சேர்த்திடுங்க .


உப்பு சேர்த்து தக்காளி வதக்கும் பொழுது ,தக்காளி வேகமாக வதங்கிடும் .
இப்போ தக்காளி நனறாக வதங்கும் வரைக்கும் ,வதக்கி வாங்க .

தக்காளி நனறாக சாப்டா வதங்கிய பின்னர் மசாலா சேர்த்திடலாம் .ஒரு கரண்டி மிளகாய் தூள் ,கூடவே மல்லி தூள் ,ஒரு கரண்டி பிரியாணி மசாலா சேர்த்து நன்றாக வதக்கிடுங்க .


மஞ்சள் தூள் சேர்த்திடுங்க .
இந்த மசாலா பச்சை வாசம் போகும் வரைக்கும் வதக்கி வாங்க .

மசாலாவோட பச்சை வாசம் போன பின்னர், தயிர் சேர்த்திடுங்க .சேர்த்ததும் உடனே நனறாக சேர்த்து கடைந்து வதக்கிடுங்க .
கட்டை படாமா நன்றாக வதக்கிடுங்க .

தயிர் மட்டன் பிரியாணியில் சேர்ப்பதால் ,மட்டன் ரெம்ப சாப்டாக வந்திடும் .அது தான் மட்டன் பிரியாணியில் தாயிருக்குள்ள தனி மவுசு .

தயிர் சேர்த்து நனறாக மிக்ஸ் பண்ணிய பின்னர் ,இப்போ வெட்டி கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்திடுங்க .

அரை கிலோ மட்டன் ,இந்த பிரியாணிக்கு சேர்த்திருக்கு .மட்டன் கொஞ்சம் பெரிய பெரிய துண்டுகளாக சேர்த்திடுங்க .அப்போ தான் பிரியாணிக்கு நன்றாக இருக்கும் .

நம்ம சேர்த்துள்ள மசாலா எல்லாம் ,மட்டனுடன் நனறாக மிக்ஸ் ஆகணும் ,அதற்கு ஏற்றவாறு ,நன்றாக கலந்து வாதாக்கி வாங்க .

இப்போ இதில் ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்திடுங்க .
ஒரு கப் தண்ணீர் சேர்த்து மட்டனை நன்றாக வேக வைத்திடுங்க .
அடுப்பை மெல்லிய நெருப்பில விட்டு இறைச்சியை வேக வைத்து கொள்ளுங்க. .

சீராக சம்பா அரிசி நாம எடுத்துள்ளதால இரண்டு கப்பு தண்ணி சேர்த்து கொள்கிறோம் .நீங்க விரும்பின
அரிசி பயன் படுத்தி கொள்ளலாம் .

நாம் இப்போ ஒன்றரை கப் அளவு அரிசியை ,பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் ஊற்றுகிறோம்.
.இப்போ இந்த அரிசியை மூன்று தடவை நனறாக கழுவிருங்க .கழுவிய பின்னர் அரிசியை 20 நிமிடம் ஊற வைத்திடுங்க .

ஊற வைத்து அரசி போடுவதால் ,ரெம்ப சாப்டாக ,பிரியாணி இருக்கும் .
இப்போ வேகவைத்த மட்டன் ,மசாலாவுடன் இணைந்து நன்றாக வெந்து வந்திருக்கு .

இப்போ வெந்த மட்டனுக்குள் ,மீளவும் இரண்டு கப்பு
தண்ணீர் சேருங்க .சேர்த்திட்டு தேவையான அளவு உப்பு போடிருங்க .
அப்புறம் குழம்பை நன்றாக கலக்கி கொள்ளுங்க .

அப்புறம் தண்ணி கொதித்து வந்ததும் ,ஊற வைத்த அரிசியை கறிக்குள்ள போட்டிருங்க .


இப்போ நன்றாக கலந்து வந்தவுடன் .அரிசி மேல அவிந்து வந்தவுடன் ,கொத்த மல்லி ,நெய் சேர்த்திடுங்க .


இப்போ இதில் அரை எலுமிச்சம் சாறு சேர்த்து நன்றாக கலந்திருங்க .
இப்போ அரிசி மேல் எழுந்து ,வந்ததும் மெல்லிய நெருப்பில ,மூடிய போட்டு மூடி வைத்து .10 நிமிடம் வரை காத்திருங்க .

மட்டன் பிரியாணி ,அடிபிடிக்காது ரெம்பவே நன்றாக வந்திருக்கு .இது போலவே நீங்களும் எந்த அரிசியிலும் பிரியாணி செய்து சாப்பிடலாம் .

இப்போ நம்ம அசத்தலான மட்டன் பிரியாணி, செமையாக ரெடியாடிச்சு .
எல்லோரும் ஓடி வந்து எடுத்து சாப்பிடுங்க .

சாப்பிட பின்னர் மறக்காம ,காசை கொடுத்திருங்க . ஏன் என்றால் .நம்ம கடையில், சாப்பாட்டுக்கு மட்டும் காசு கொடுக்கணும் .தண்ணி மட்டும் இலவசம் நண்பர்களே .


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply