பிரபல டிவி நடிகைக்கு கொரோனா


பிரபல டிவி நடிகைக்கு கொரோனா

பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

பிரபல டிவி நடிகைக்கு கொரோனா தொற்று
டிவி நடிகை நவ்யா சாமி


இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது

உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில்

வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நவ்யா சாமி

சமீபத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என நேற்று முடிவு வந்துள்ளது. இதுகுறித்து அவர்

கூறும்போது, நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன்

பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.