பிக்பாஸ் 4வது சீசன் – அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி

பிக்பாஸ் 4வது சீசன்

பிக்பாஸ் 4வது சீசன் – அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் அதிக வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ஆரி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

பிக்பாஸ் 4வது சீசன் – அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி
கோப்பையுடன் ஆரி


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ந் தேதி தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி 16

போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் சோம் 5வது இடம் பெற்றிருந்தார். இவரை கடந்த சீசன் டைட்டில்

வின்னரான முகின் வெளியே அழைத்து வந்தார். இதையடுத்து 4வது இடம் பிடித்த

ரம்யா பாண்டியனை நடிகரும் கடந்த சீசன் போட்டியாளருமான கவின் வெளியே அழைத்து வந்தார்.

ஆரி, பாலா

பின்னர் 3வது இடம் பிடித்த ரியோவை ஷெரின் வெளியே அழைத்து வந்தார். மீதமிருந்த பாலா, ஆரி ஆகியோரை கமல்ஹாசன் பிக்பாஸ்

வீட்டுக்குள் சென்று அழைத்து வந்தார். பின்னர் இவர்களில் அதிக வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆரிக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கான கோப்பையும், ஐம்பது லட்சத்திற்கான

காசோலையும் கொடுக்கப்பட்டது. டைட்டில் ஜெயித்த ஆரிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Spread the love