பதில் சொல் ….!
கடல் மேலே மஞ்சத்தை
கண்ணே நான் கட்டிடவா ..?-நீ
கண்ணுறங்க , தாலாட்ட
கடல் அலையை தந்திடவா ..?
மழை மேக முகில் உரித்து
மங்கை உன்னை போத்திடவா …?
தங்கமே நான் மட்டும் – உனை
தாளமால் தழுவிடவா…?
வெள்ளி நிலா பேரழகில்
வெளியுலகை காட்டிடவா ..?- நீ
வேண்டும் வரங்களை தான்
விதம் விதமா தந்திடவா ..?
அழகு குலையாமல்
ஆயூள் எல்லாம் வைத்திடவா ..?
அடி வாங்கும் மத்தாளாம்
அதுவாகா காத்திடவா ..?
எதுவாக உனை தாங்க
எனக்கு நீ கூறாயோ ..?
ஏனோ நீ வெட்கி
ஏங்கி திரை போட்டாயோ ..?
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் – 15-01-2018