திருமணம் குறித்து மனம்திறந்த பட நாயகி

இதனை SHARE பண்ணுங்க

திருமணம் குறித்து மனம்திறந்த பட நாயகி

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பிசியான நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

திருமணம் குறித்து மனம்திறந்த ‘பீஸ்ட்’ பட நாயகி
பூஜா ஹெக்டே


தமிழில் ஜீவா ஜோடியாக முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்

பூஜா ஹெக்டே. அந்த படத்துக்கு பின்னர் டோலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ள பூஜா ஹெக்டே, அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்

இதுதவிர தெலுங்கு, இந்தி படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே, சமீபத்திய பேட்டியில் திருமணம் குறித்து பேசி உள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது: “திருமண வயது வந்துவிட்டது என்பதற்காகவோ அல்லது திருமணம்

செய்து கொள்ள இதுதான் சரியான நேரம் என்பதற்காகவோ திருமணம் செய்து கொள்வது கண்டிப்பாக சரியல்ல.

வாழ்க்கை எல்லாம் சேர்ந்து இருக்க முடியும் என ஒரு மனிதரோடு இருக்கும்போது தோன்றினால்

அப்போது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவர்தான் வாழ்க்கைக்கு நல்ல கணவராக இருப்பார்” என்றார்.


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply