நேரில் வந்து விடு

நேரில் வந்து விடு
Spread the love

நேரில் வந்து விடு

நித்திரையில் நான் விழிக்க
சித்திரையை தேடுகிறேன்
முத்திரையை பதித்த கவி
முகத்திரையை பார்க்கிறேன்

சத்தம் இல்லா தூங்கிவிட
சத்தியமா முடியவில்லை
செத்த பிணம் ஆகிவிட்டேன்
சேதி சொல்ல யாரும் இல்லை

இத் தளத்தில் வந்த கவி
இதயமதை துளைத்ததுவே
இத் துயரை தந்த கவி
இதயமதை ஏற்றிடுமோ

பொற் கவியை நான் படிக்க
போதும் நேரம் வந்திடுமோ
நித்திரையில் நான் விழிக்க
நிஜம் வந்து கூடிடுமோ

சத்தியமாய் சொல்லி விடு
சாதனைகள் செய்திடுவேன்
செத்துவிட முன்னே நான்
சொர்க்கமதை கண்டிடுவேன் .

ஆக்கம் -15-05-2025
வன்னி மைந்தன்

( பதில் கவி }