நுவரெலியா – ஹட்டன் வீதியில் மண்சரிவு
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பங்களாஹாத்த பகுதியில் சனிக்கிழமை (18) ஏற்பட்ட மண்சரிவால் அவ்வீதியூடாக ஒருவழிப் போக்குவரத்தே இடம்பெற்று வருகின்றது.
இம் மண்சரிவு காரணமாக நுவரெலியா, தலவாக்கலை , ஹட்டன் மற்றும் மெராயா வழியூடாக டயகமைக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நானுஓயா பொலிஸார் , நுவரெலியா வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மண்மேட்டை அகற்றி இவ்வீதியின் போக்குவரத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
நுவரெலியா – ஹட்டன் வீதியில் மண்சரிவு
மேலும் தொடர்ந்து மத்திய மாகாணத்தில் விடாது பெய்யும் அடைமழை காரணமாகவே நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இவ்வீதியில்
பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கொழும்பு குவைத் விமான சேவை ஆரம்பம்
- 250 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான எடையுள்ள பெய்லி பாலங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைத்தது
- ரத்மலானாவில் உள்ள ஒரு வீட்டின் மீது கையெறி குண்டு தாக்குதல்
- தலத்துவோயாவில் வைரலான பூனை மீதான கொடுமைச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது
- வெலிகம கடற்கரையில் உல்லாச பயணி பலி
- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டதை மகாநாயக்க தேரர்கள் உறுதிப்படுத்தினர்.
- செம்மணி அகழ்வாராய்ச்சியின் 100-வது நாள் – மனித எலும்புக்கூடுகள் 500-ஐத் தாண்டியது
- குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநர் ஷானி அபேசேகரா
- துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர்
- லங்கா சதோசா 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கிறது
















