நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி


நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி

குடும்ப பிரச்சனை காரணமாக டி.வி. நடிகை ஜெயஸ்ரீ சென்னையில் அவரது இல்லத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டி.வி. நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி
நடிகை ஜெயஸ்ரீ
வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து

கொண்டனர். பின்னர், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாகவும்,

தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை ஜெயஸ்ரீ புகார் கொடுத்தார்.

அதன்பின், தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க

வேண்டும் என்றும் ஜெயஸ்ரீ சமீபத்தில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கூறினார்.

மருத்துவமனையில் ஜெயஸ்ரீ

இந்நிலையில், நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்போது சென்னையில் உள்ள தனியார்

மருத்துவமனையில் ஜெயஸ்ரீ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தில் வருகிறார்கள்.