தீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா – வைரலாகும் வீடியோ

தீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப்

தீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா – வைரலாகும் வீடியோ

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான ரச்சிதா, தனது

தீவிர ரசிகர் ஒருவரின் இல்லத்துக்கு சர்ப்ரைஸாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சின்னத்திரை நடிகையான ரச்சிதா, பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற

சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர உப்புக்கருவாடு

என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவரின் இல்லத்துக்கு சர்ப்ரைஸாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரச்சிதா.

மாற்றுத்திறனாளி இளைஞரான அந்த ரசிகருக்கு தான் வாங்கி வந்த இனிப்புகளை ஊட்டி விட்ட ரச்சிதா, அவருக்கு புத்தாடையை பரிசாக வழங்கினார்.

மேலும் அந்த ரசிகரை ஒரு தாயைப் போல ரச்சிதா அரவணைத்த காட்சி

காண்போரை நெகிழச் செய்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Spread the love