திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா


திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா

பிரபல நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்ததாக கூறியிருக்கிறார்.

திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா
சமந்தா
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா. இவரிடம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், வர்த்தக

படங்கள் இந்த இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:-

“நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும். வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறுமாதிரி

இருக்கும் என்றெல்லாம் பிரித்து பார்த்து நான் கணக்கு போட்டது இல்லை. எதிர்பார்க்காமல் சினிமா துறைக்கு வந்து நடிகையானேன். அதிர்ஷ்டம் கூட சேர்ந்ததால் சிறந்த நடிகை என்று பெயர் வாங்கினேன்.

சமந்தா

என்னை விட அழகானவர்கள். திறமையானவர்கள் எவ்வளவோ பேர் இருந்தும் அவர்களை மீறி முன்னுக்கு வந்து இருக்கிறேன்.

எதிர்பாராமல் இந்த தொழிலுக்கு வந்தாலும் இப்போது சினிமாதான் எனது வாழ்க்கை என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு மீது காதலை

வளர்த்துக்கொண்டேன். அதனால்தான் அந்தமாதிரி படம் இந்த மாதிரி படம் என்றெல்லாம் வேறுபடுத்தி பார்க்காமல் எல்லாவிதமான கதைகளிலும் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்.”

இவ்வாறு சமந்தா கூறினார்.