
தேனிசை செல்லப்பா
காலத்தால் அழியாத காவியன்
கரிகால தேசத்தின் பாடகன்
நெஞ்சுக்குள் நிற்கின்ற முதல்வன்
நேயத்தை வீசும் பண்பன்
தடை நூறு வீழ்ந்தும்
தளராது நின்றவன்
தாயகம் பாடியே
தன் தாகம் தீர்த்தவன்
உனக்கும் எனக்கும் உன்னத உறவு -நீ
உயிருக்கு உயிரானாய் எங்களின் நிலவு
கண்ணீராய் போனதே எங்கள் கனவு
காணாமல் போனதே எங்கள் புலவு
ஆறாமல் துடிக்குதே நெஞ்சம்
ஐயா உந்தன் பாடலே தஞ்சம்
நீ தானே தருகிறாய் வீரம்
நினைக்கிறோம் ஈழம் கொஞ்சம் கொஞ்சம்
நீ வேண்டும் நீ வேண்டும் செல்லப்பா
நிலம் மீளும் நீ பாட வேண்டும்
நான் எழுத நீ பாட வேண்டும் – இழிந்த
நாவும் கொஞ்சம் மாற வேண்டும்
உன் அகவை நூறுக்குள் – ஈழம்
உயிர் பெற வேண்டும்
உயிர் உள்ளவரை
உலக தமிழ் வாழ நீ பாட வேண்டும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 04-04-2023