வில்லன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி

இதனை SHARE பண்ணுங்க

வில்லன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயாவிற்கு திருமணம் நடந்துள்ளது.

வலிமை பட வில்லன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சிரஞ்சீவி
மணமக்களுடன் சிரஞ்சீவி


அஜித்குமாரின் வலிமை படத்தில் வில்லனாக நடிப்பவர் கார்த்திகேயா. இவர் தெலுங்கில்

ஆர்.எக்ஸ்.100 படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது.

இதையடுத்து மேலும் பல படங்களில் நடித்தார். தற்போது ராஜவிக்ரமகா என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

கார்த்திகேயாவுக்கும், லோகிதா என்பவருக்கும் காதல் மலர்ந்தது. சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த

பட விழாவுக்கு காதலியை அழைத்து வந்து அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதை

வெளிப்படையாக அறிவித்தார். எனக்கு தோழியாக காதலியாக இருந்தவர் என் வாழ்க்கை துணையாக மாறப்போகிறார் என்று கூறினார்.

கார்த்திகேயா திருமணம்

இந்த நிலையில் கார்த்திகேயா-லோகிதா திருமணம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. மணமக்களை

சிரஞ்சீவி உள்ளிட்ட தெலுங்கு நடிகர் – நடிகைகள் நேரில் வாழ்த்தினார்கள்.


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply