சிக்கன் புரியாணி செய்யும் முறை

சிக்கன் புரியாணி செய்யும் முறை
Spread the love

சிக்கன் புரியாணி செய்யும் முறை, கடை சுவையில் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி வாங்க பார்க்கலாம் .

சிக்கன் புரியாணி செய்யும் முறை ..
தேவையான பொருட்கள்
அரிசி 2 கப்
சிக்கன் 1/2 கிலோ
வெங்காயம் 2
தக்காளி 2
நெய் 2 தேக்கரண்டி
கறுவா 1 துண்டு
கராம்பு 4
ஏலக்காய் 4
புரியாணி இல்லை 4
அன்னாசி பூ 3
இஞ்சி 2 துண்டு
உல்லி 4 பல்லு
மஞ்சல் 1/4 தேக்கரண்டி
உப்பு தேவைக்கு
மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி
தயிர் 2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 3
மல்லி இலை
புதினா இலை

பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கவும், அதில் நெய் சேர்த்து கொதிக்க விடவும். அதில் கறுவா, கராம்பு, ஏலக்காய், புரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் இடித்த இஞ்சி உல்லி போட்டு சில நிமிடம் விடவும்.


பின்னர் அதற்க்குள் வெட்டிய வெங்காயம் போட்டு கோல்டன் கலர் வரும் வரை வதக்கவும் .

பிறகு அதனுள் உப்பு மற்றும் வெட்டிய தக்காளியை போட்டு கரையும் வரை வதக்கவும்.

பின் அதனுள் மிளகாய்த்தூள் போட்டு தூள் வெக்கை அடங்கும் வரை வதக்கவும்.

பின்னர் அதில் தயிர் போட்டு பச்சை மனம் போகும் வரை வதக்கவும் பிறகு அதில் சிக்கனை போட்டு 10-15 நிமிடம் வரை மிதமான சூட்டில் வைக்கவும்.


சிக்கன் ரெடி ஆகும் வரை இன்னொரு பாத்திரத்தில் தண்ணீர் சுட வைத்து 20 நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை போட்டு 70% அவிய வைத்து வடிச்சு எடுக்கவும்.


பின்னர் தயார் ஆகி இருக்கும் பிரியாணி கலவையில் சோற்றை போட்டு மெதுவாக கிளற வேண்டும், இப்போ சுவையான சிக்கன் பிரியாணி தயார். அன்போடு பரிமாறவும் .

காணொளி