சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா
சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் மஹிந்தா ராஜபக்ஷ மீளவும் இனவாதத்தை காக்கி இருக்கிறார்.
ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய பொழுது சமாதானம் நாட்டு நிலவுவதற்காகவும் இலங்கை ஐக்கியப்பட்டு இலங்கையாக வாழ்வதற்காகவும் இந்த போரை தான் நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
ஒரு தரப்பு வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் மறு தரப்பு அழிக்கப்படத்தான் வேண்டும் என்கிறார் அவர்.
தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால்
ஆகவே அவரது கூற்றின்படி அது சரியாக இப்பொழுது இருக்கலாம். அதேபோன்று நாளை தமிழன் வெல்ல வேண்டுமாக இருந்தால் நீங்களும் அழிக்கப்படுவீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
இன்று தமிழர் வீழ்த்தப்பட்டதாக கூறும் இந்த மகிழ்ச்சி நாளைக்கு உங்களுக்கு திருப்பி நடந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்து பாருங்கள்.
இலங்கையுடன் சேர்ந்திருந்து ,தமிழகத்தை அழித்த நாடுகள் இன்று போரில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.
வீழ்ந்த இனம் தமிழினம் நாளை எழுந்து நடக்கும் அப்பொழுது உங்கள் தேசம் விழுந்து கிடக்கும்.
காப்பார் யாரும் இன்றி கண் துடைப்பார் யாருமின்றி .விழுந்து அழுகின்ற பொழுது .உங்கள் வீரத்தின் விலாசங்கள் அப்பொழுது சந்தி சிரிக்கும்.
தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம்
இனவாதத்தை காக்கி ஒரு இனமான விடுதலையை நசுக்கி .ஒருங்கிணைந்த நாட்டுக்குள் .ஒன்றுபட்ட வாழ துடிக்கும் தமிழரை அடக்கியாள நினைக்கும் ,இனவாதம் தோற்றுப் போகும் என்பதை வருங்காலங்கள் பறைசாற்றும் .
தமிழன் எழுந்து நடக்கின்ற எதிர்காலம் அவன் கண்ணெதிரே மிளிரும் .
அவர்களுடைய அசுர வளர்ச்சி கண்டு சிங்கள தேசம் தலை குனியும் நிலை ஏற்படும்.
சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும்
தமிழன் வீரமுள்ளவன் என்பதையும் ,மானமுள்ளவன் என்பதையும் ,அமைதியாக கடந்து சென்றான் என்கின்ற வரலாறுகள் மீளவும் உங்களை தட்டி நிமிர்த்தி கேள்வி கேட்கும் .
சிங்கள தேசம் உங்களுக்கு எதிராக நின்று குரல் கொடுக்கும் ,என்பதை மறந்துவிடாதீர்கள் இனவாதிகளே இனஅழிப்பு நாயகர்களே.
- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

- அரசு மருந்தாளுநர்கள் ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்

- உலகின் 20 வது துறைமுகமாக கொழும்பு துறைமுகம்

- மத்திய உயர்நிலப் பாதுகாப்பு அதிகாரசபையை நிறுவுவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிடம் தாக்கல்

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்









