தளபதி பால்ராஜ் நினைவு நாள்
தளபதி பால்ராஜ் நினைவு நாள் என்றாகும்,தமிழின விடுதலைக்காக தன்னைத் தந்து என்று தளபதி பால்ராஜ் அவர்கள் வீர மரணம் ஆகி ,பல ஆண்டுகள் கடக்கின்ற பொழுதும் ,அவனுடைய சாதனைகள் இன்றும் நீடித்து அவனை பேச வைக்கிறது.
தலைவர் பிரபாகரனுக்கு அடுத்ததாக இரண்டாம் நிலை இராணுவ தளபதியாக செயலாற்றிய வன்.
களத்தில் பால்ராஜ் களமிறங்கினால் போர்முனை அதிரும்
பால்ராஜ் களமிறங்கிய போர்முனை அதிரும் , அவன் கையிருக்கும் கந்தகங்கள் கனரகங்கள் வெடிக்கும்.
எதிரி படைகள் எதிரே வர மறுக்கும் ,போர்முனையில் அவன் பேரரசன் பெரும் போர் வீரன்.
பால்ராஜ் நிற்கின்ற களம் தோற்காது ,வருகின்ற படைகள் பாடை கட்டி அணு ப்பப்படுவார்கள்.
துணிவு அசாத்திய சாதனை ,படைகளை வழி நடத்தும் தனித்திறன் ஆளுமை என்பன பால்ராஜ் இடம் என்றும் நிலைத்து நின்றது.
ஆனையிறவு படைத்தளத்தை விழுத்திய தளபதி பால்ராஜ்
ஆனையிறவு படைத்தளம் விழுத்துவதற்காக பால்ராஜ் தலைமையில் களம் இறக்கப்பட்ட போராளிகளை காத்து ,அந்த படைத்தளத்தை வீழ்த்தி வெற்றி சாதனை நடத்தியவன் பால்ராஜ்.
குடாரப்பு தரை இறக்கம் பால்ராஜ் தலைமையில் இடம்பெற்றது. இன்றும் அந்த சமர் உலக அரங்கில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எங்கள் தளபதி பால்ராஜ் அந்த களமுனை சாதனைகள் இன்றும் ஆப்பிரிக்க நாடு ஓன்றில் இராணுவத்திற்கு பயிற்சியாக கொடுக்கப்படுகிறது.
20000 ராணுவத்தை சுற்றி வளைத்த வீர தளபதி பால்றாஜ்
20000 ராணுவத்தை சுற்றி வளைத்து ,கூடாரப் வழியை முற்றுகையிட்டு அழித்து ஒழித்து அந்த பெரும் ஆனையிறவு படை முகாமை வீழ்த்தி சாதனை படைத்த சாதனை நாயகன்.
இன்று அவன் களத்தில் இல்லை .இதனால் தமிழினம் இதயம் உடைந்து அழுகிறது.
எங்கள் தமிழீழம் என்றோ விடிந்திருக்கும்
இவன் போல ஒரு பத்து தளபதிகள் கிடைத்து இருந்தால் ,எங்கள் ஈழம் என்றோ விடிந்திருக்கும் என்பது உதாரணம்.
விழி மூடி உறங்குகின்ற எங்கள் வீர தளபதியே ,நாளை உன்னை தேசம் வணங்கும்போது, எங்கள் தேச புலமாக மலர வேண்டும் என்பதை எமது கருத்தாகும்.
வன்னி மைந்தன்













