சமந்தா கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு

இதனை SHARE பண்ணுங்க

சமந்தா கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு

அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் புஷ்பா படத்தில் இடம் பெற்றிருக்கும் சமந்தாவின் கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

சமந்தா ஆடிய கவர்ச்சி பாடலுக்கு எதிர்ப்பு
சமந்தா


அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புஷ்பா’. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படம்

செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். முதல் பாகம் வரும் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் சமந்தா நடனம் ஆடிய பாடலின் லிரிக்கல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், “ஓ அண்டா வா மாவா.. ஓஓ அண்டா வா மாவா” என்கிற இந்த பாடல் வரிகள் தெலுங்கில்

இடம் பெற்றுள்ளன. தமிழிலும் இந்த பாடல் ‘ஓ சொல்றியா மாமா.. ஓஓ சொல்றியா மாமா’ என்கிற வரிகளைக் கொண்டு வெளியாகியுள்ளது.

சமந்தா

தமிழில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா இந்த பாடலை எழுதியுள்ளார். இந்நிலையில், ஒரு பெண் எவ்விதம் ஆடை அணிந்திருப்பினும், என்ன நிறம், உயரம், தோற்றமாக

இருப்பினும், எப்படி பேசினாலும் ஆண்களின் புத்தி வக்கிரம் நிறைந்ததாக இருப்பதாக இந்த பாடல் பொருள் தருவதாகவும், அனைத்து ஆண்களையும் இந்த வரிகளின் கருத்துக்கள் தவறாக

சித்தரிப்பதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply