கோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்


கோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் என்கிற ராக், கோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளி இருக்கிறார்.

கோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்
நடிகர் டுவைன் ஜான்சன்


பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன். இவரை ரசிகர்கள் த ராக் என்று அழைக்கின்றனர். பாஸ்ட் ஆண்ட் பியூரியஸ், ஜூமாஞ்சி

, ஸ்கைஸ்க்ராப்பர், ஸ்கார்ப்பியன் கிங் உள்பட பல படங்களில் நடித்து

உலகம் முழுவதும் புகழ்பெற்று இருக்கிறார். தற்போது பிளாக் ஆடம் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

டுவைன் ஜான்சன் படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டபோது தனது வீட்டு கேட் திறக்காததால் அதை கையால் உடைத்து எறிந்த

புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நான் படப்பிடிப்புக்கு செல்ல

புறப்பட்டபோது புயலால் மின் தடை ஏற்பட்டது. ஆனாலும் படப்பிடிப்புக்கு சென்றாக வேண்டும். வீட்டின் வாயில் கேட் திறக்கவில்லை.

நடிகரின் வீட்டு கேட்

கேட்டை திறப்பதற்கான ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யவில்லை. அதை சரிசெய்யும் தொழில்நுட்ப நிபுணர்கள் வந்து

சேர 45 நிமிடங்கள் ஆகும் என்றனர். எனக்காக நூற்றுக்கணக்கானோர் நான் வந்தால்தான் வேலையை தொடங்க

முடியும் என்ற நிலையில் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்தனர். இதனால் வாயில் கேட்டை பிடித்து இழுத்து தள்ளி உடைத்து

செங்கல் சுவரில் இருந்து முழுமையாக பெயர்த்து எடுத்து புல்வெளியில் வீசினேன். எனக்கு நேரம் சரியில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்