காதல் திருமணம் தான் செய்வேன் – சிம்பு பட நடிகை

Spread the love

காதல் திருமணம் தான் செய்வேன் – சிம்பு பட நடிகை

சிம்பு பட நடிகை ஒருவர் காதலித்துதான் திருமணம் செய்து கொள்வேன் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

காதல் திருமணம் தான் செய்வேன் – சிம்பு பட நடிகை பேட்டி
கல்யாணி பிரியதர்ஷன், சிம்பு


பிரபல டைரக்டர் பிரியதர்ஷன் – நடிகை லிசியின் மகளான கல்யாணி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹலோ என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஹீரோ’ படத்தில் நடித்தார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்

உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன்

இவர் அளித்த சமீபத்திய பேட்டியில், எனது வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க, ‘மணமகன் தேவை’ என்று பத்திரிகைகளில்

விளம்பரம் தேவைப்படாது. நான் காதலித்துதான் திருமணம் செய்துகொள்வேன். காதலிக்கும் விஷயத்தில் நான் அதிக

சினிமாத்தனத்தை எதிர்பார்க்கிறேன். எனக்கான ஆளைபார்க்கும்போது என் இதயத்தில் தீப்பொறி பறக்கும் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

காதல் திருமணம் தான்

Spread the love