காதலரை கரம்பிடித்த நடிகை


காதலரை கரம்பிடித்த நடிகை

மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ரோஷ்னா அன்ராய் தனது காதலரை கரம்பிடித்துள்ளார்.

மலையாள படமான ஒரு அடார் லவ், பிரியா வாரியரின் கண்சிமிட்டல் காட்சி மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானது.

இந்த படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். படத்தில் ரோஷ்னா அன்ராயும் ஆசிரியை கதாபாத்திரத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

பாபம் செய்யாதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உள்பட மேலும் பல படங்களிலும் நடித்து இருக்கிறார். ரோஷ்னா அன்ராயும்,

அங்கமாலி டைரிஸ், தண்ணீர் மதன் தினன்கள் உள்ளிட்ட

மலையாள படங்களில் நடித்துள்ள கிச்சு டெல்லசும் காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு எடுத்தனர்.

கணவருடன் ரோஷ்னா

சில வாரங்களுக்கு முன்பு ரோஷ்னா அன்ராய் வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “எங்கள் திருமணத்தை முறைப்படி

அறிவிக்கிறேன். இந்த வாழ்க்கை எனக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளது. உண்மையான காதலோடு என்னை நேசித்த கிச்சுக்கு நன்றி” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் ரோஷ்னா அன்ராய்க்கும், கிச்சு டெல்லசுக்கும் கொச்சியில் திருமணம் நடந்தது. கொரோனாவால் நெருங்கிய

உறவினர்களை மட்டும் அழைத்து அங்குள்ள தேவாலயத்தில் திருமணத்தை முடித்தனர்.