ஒரு நாள் வெல்வேன்

ஒரு நாள் வெல்வேன்
Spread the love

ஒரு நாள் வெல்வேன்

பிச்சைக்காரன் என்றென்னை
பிடரி அடித்தார் பிடரி விழும்
பிரளயம் அதிரும் செய்தி வரும்
பின் தங்கினார் மூளை விழும்

இத்தனை நாள் இழி நிலைகள்
இந்த ஆண்டு ஓடி விடும்
இத்தகை உயர்வு நிலை கண்டு
இழிந்த நா பதறி விடும்

அத்தகை வேலை நடக்கிறது
அகிலம் வியக்க முளைக்கிறது
எத்திசை மாந்தரும் எழுந்து வரும்
எப்படி என்றே எழுதி தள்ளும்

முத்தி இதுவென்று முன் பகரும்
முத்திய சாதனை இது வென்றும்
கத்திய வாய் எல்லாம் கதையளக்கும்
கத்தி கத்தியே செயல் இழக்கும்

எழுதி வைத்து எழுகின்றேன்
எழும் திங்கள் இதனை காட்டிடுவேன்
எழு கதிர் என்றே எனை உரைப்பேன்
எப்படி இப்படி என வியந்தேன் ..!

ஆக்கம் -25-06-2025

வன்னி மைந்தன்