எம் அவலம் யார் புரிவார்
ஆளை வாட்டும் குளிருக்குள்ளே
ஆயுள் மெல்ல கரைகிறதே ….
ஆடை மாற்றி ஓடும் வாழ்வை
அல்லும் ,பகலும் இடுகிறதே ….
மஞ்சள் வெயில் உடல் தழுவும்
மாசம் மனது தேடுறதே ..- நாள்
மங்கும் ஒளியின் காலத்தையே
மனது இன்று வெறுக்கிறதே …..
ஆடை கட்டிய வெங்காயம்
அது போல் உடலும் ஆகிறதே …
உயிரை கொல்லும் குளிரை அடக்க
உடலில் சுமையை குவிக்கிறதே ….
மறைக்க உடலை மறந்தாலே
மரணம் உயிரை தின்றிடுமே ….
கொடும் பனியில் நனையும் வாழ்வதனை
கொஞ்சும் உறவுகள் அறிந்திடுமோ ..?
- வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -22-01-2018 - வன்னி மைந்தன் கவிதைகள்