
எப்படி ஆறும் இத்துயர்
வீரம் விளைந்த மண் எங்கே
விதையான வேர் எங்கே
ஆழ கடலோடிய கலமெங்கே
ஆகாய வான் எங்கே
ஓயாது ஒலித்த குரல் எங்கே
ஓயாத அலை களமெங்கே
இரவெல்லாம் விழித்த
இன காவல் எங்கே
எல்லாம் இழந்து எங்கள் தேசம்
ஏனோ இப்படி கிடக்கிறது
எவர் என்ன கேட்பார்
எவர் என்ன சொல்வார்
சொல்ல மறந்த கதைகள்
சொல்லாமல் உறங்க
சொல்லி அழ முடியா
சொந்தங்கள் தவிக்க
நடை பிணமாய் உடல்
நாதியற்று நடக்கிறது
அழுவதால் பயனில்லை
ஆனாலும் வலிக்கிறது
எழுத முடியா பேனைகளும்
எடுத்துரைக்க முடியா வாய்களும்
மவுனம் ஆனதால்
மாயங்கள் நடக்கிறது …..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-04-2024
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா
- எழுந்து வா
- உயிராயுதம்
- யார் நீ
- முன்னாள் போராளிகள் அவலம்
- உன்னால் தவிக்கிறேன்
- அவளை தேடுகிறேன்
- சம்பந்தன் விடை பெற்றார்
- ஏன் துரோகம் செய்தாய்
- என்னை எரிக்காதே
- வந்து விடு
- படிக்க துடிக்கும் புத்தகம் நீ
- மங்கைகள் களம் புகுந்தது
- பதில் சொல்
- என் செய்வேன்
- முட்டை கண்ணு பார்வை
- நெஞ்சை பிளந்து உன்னை தேடி
- உன்னை பார்க்கையில