என்னை ஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்

Spread the love

என்னை ஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன், என்னை ஒழிக்கமுயன்றார் என்று நடிகை சனம் ஷெட்டி மீது புகார் கூறியிருக்கிறார்.

என்னைஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்
சனம் ஷெட்டி – தர்ஷன்
தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் எனவும்

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள்

காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார்.

இதனை சனம் ஷெட்டி மறுத்தார். தர்ஷனும், நானும் இரண்டரை வருடம் கணவன்-மனைவி போலவே

வாழ்ந்தோம். திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டோம். ஆனால் அவர் மாறி விட்டார். முன்னாள் காதலருடன் நான் இருந்ததாக கூறி இருப்பதில் உண்மை இல்லை என்றார்.

இந்த நிலையில் சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சனம் ஷெட்டி – தர்ஷன்

“சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால்

பிரச்சினை சிக்கலாவதற்குள் சுமுகமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும். மகிழ்ச்சியில்லாத உறவை தொடர்வது சரியல்ல.

அந்த நபர் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இல்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். நான் காயப்பட்டேன். அவரது

குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எனது எதிர்காலம் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி.”

இவ்வாறு தர்ஷன் கூறியுள்ளார்.


Spread the love