உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது-புதின்

Spread the love

உலகில் யாராலும் ரஷியாவை தனிமைப்படுத்த முடியாது: அதிபர் புதின்

உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது போர்

தொடுத்த ரஷியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை உலக நாடுகள் பலவும் விதித்துள்ளன.

ரஷியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள வேஸ்டாக்னி விண்வெளி ஏவுதள மையத்திற்கு சென்ற அதிபர் புதின் நிருபர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ரஷியாவை உலகின் எந்த சக்தியாலும் தனிமைப்படுத்த முடியாது. இன்றைய சூழலில், யாரையும் எந்த ஒரு நாடும் தனிமைப்படுத்துவது என்பது

நிச்சயமாக சாத்தியம் இல்லாத ஒன்று.
எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்பட விரும்பும் நட்பு நாடுகளுடன் நாங்கள் பணியாற்றுவோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *