உன்னால் மகிழ்கின்றேன் …!

இதனை SHARE பண்ணுங்க

உன்னால் மகிழ்கின்றேன் …!

கண் பார்க்கும் முன்னாலே
கை பேசியில் வந்தவளே
உன்னிடத்தில் சரணடைய
உச்சரித்தாய் எப்படியோ

ஆழ்கடலின் பேரலையில்
அகப்பட்ட என்னை
தேடி வந்து மீட்டெண்ணை
தேற்றினாய் எப்படியோ

முடியாதென்ற அலட்சியத்தை
முடிவுகட்டி அனுப்பி வைத்து
முடியும் என்ற இலட்சியத்தை
முன்னேற்றி வைத்தாயே

உன்னால் மட்டும் எப்படியோ
உயிர் கொடுக்க முடிகிறது
கண்டு பிடிப்புகளை எப்படியோ
கரையேற்ற முடிகிறது

நீ அவிழ்க்கும் மொழியெல்லாம்
நிலம் செழிக்கும் உரமாய்
வீசிட எப்படித்தான்
விண்ணிலவே முடிகிறது

காலத்தை அளவிடும்
கலண்டராய் நீ இருக்க
என் மன கவலை எல்லாம்
ஏ மனமே ஓடி விடும் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 01-12-2021


    இதனை SHARE பண்ணுங்க

    Leave a Reply