உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி
கனடா – ரஷ்ய இராணுவத்தின் உக்கிரேன் நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கையை கட்டு படுத்த கனடா உக்கிரேனுக்கு முப்பத்தி ஒன்பது நவீன கவச வாகனங்களை வழங்குகிறது .
கனடா ஆயுத உதவி
இந்த கவச வாகனங்கள் ஆயுத உதவி வாங்குதல் ஊடாக முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தின் படை நகர்வை தடுத்து நிறுத்தமா உக்கிரேன் என்பதும் இந்த கவச வாகனங்கள் கண்டு மிரளுமா எதிரி இராணுவம் என்பதே கேள்வியாக உள்ளது .
சூடு பிடிக்கும் உக்கிரேனுக்கான ஆயுத விற்பனை
பல பில்லியனுக்கு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நாடுகளில் உக்கிரேன் ஆயுதங்களை வாங்கி குவித்து போரிட்ட பொழுதும் தாம் இழந்த பகுதிகளை அதனால் மீட்க முடியவில்லை .
அவ்வாறான நிலையில் உக்கிரேனுக்கு கவச வாகனங்களை கனடா வழங்குவது என்பது தமது ஆயுத வியாபாரத்தை பெருக்கிடவே என்பது இதில் இருந்து புலனாகிறது .
அனுபவம் வாய்ந்த முன்னணி தாக்குதல் படைப்பிவினர் உக்கிரேன் இராணுவத்தில் பலியாகியும் ,காயப்பட்டு முடங்கியுள்ள நிலையில் இவ்வாறு அனுபவம் வாய்ந்த ரஷ்ய இராணுவத்தினருடன் உக்கிரேன் இராணுவம் மோதலை தொடுத்திட முடியுமா என்கின்ற கேள்வி இங்கே வைக்க படுகிறது .
உக்கிரேன் களத்தில் நடத்த படும் ஆயுத சோதனைகள்
உக்கிரேன் நாட்டுக்கு உதவி வருகிறோம் என்கின்ற போர்வையில் அமெரிக்கா ,பிரித்தானியா கனடா நேட்டோ நாடுகள் ஆயுதங்களை பல மில்லியனுக்கு விற்ற வண்ணம் உள்ளன .

தவிர தமது போராயுதங்களை உக்கிரேன் களமுனையில் சோதனை செய்து வருகின்றன .அதற்காக குறைந்த வட்டியில் இந்த ஆயுத கடனுதவி வழங்க படுகிறது .
இலங்கையை போல ஆயுதங்களை வாங்கி குவித்து போரிடும் உக்கிரேன் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று சிக்கி தவிக்கும் நிலைக்கு செல்ல கூடும்.
மறுபுறம் எதிரி இராணுவத்திடம் உக்கிரேன் முழுமையாக வீழ்ந்து விட்டால் இந்த கடனை யார் வழங்குவது என்ற கேள்வியும் எழுகிறது .
இவ்வாறான சிக்கலான நிலைக்குள் உக்கிரேன் சிக்கி தவித்து வருகிறது . தமது முக்கிய படையணிகள் அழிந்து ,மக்கள் பல்லாயிரம் பேர் பலியாகி ,மேலும் அவர்கள் சொத்துக்கள் பெருமளவில் அழிந்து சுடுகாடாக காட்சி அளிக்கிறது உக்கிரேன் .
இவ்வாறான இறுக்கமான ரஷ்ய இராணுவத்தின் முற்றுகையில் சிக்கி தவிக்கும் உக்கிரேன் இராணுவம் எவ்வாறு அந்த முற்றுகையில் இருந்து மீண்டு எழ முடியும் ..?
மேற்குலக நாடுகளின் தோள்களில் ஏறி நின்று ஆடி வரும் உக்கிரேன் வீழ்ந்து மூழ்கும் காலம் அருகில் என்பதே இந்த பர பரப்பு ஆயுத விற்பனை எடுத்து காண்பிக்கிறது .
- வன்னி மைந்தன் –