அமலாபாலின் தந்தை மரணம்


அமலாபாலின் தந்தை மரணம்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அமலாபாலின் தந்தை பால் வர்கீஸ் இன்று கேரளாவில் காலமானார்.

நடிகை அமலாபாலின் தந்தை காலமானார்
அமலாபால்
பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் மூலம் மிகவும்

பிரபலமானவர் நடிகை அமலாபால். இப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. இப்படத்தை தொடந்து,

தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், விஜய்யுடன் இணைந்து தலைவா படத்தில் நடித்தார்.

நடிகை அமலாபாலின் தந்தை

தற்போது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். இந்நிலையில், இவரது

தந்தை பால் வர்கீஸ் இன்று காலமானார். நாளை மாலை இவரது இறுதி சடங்குகள் கேரளாவில் உள்ள குறுப்பம்படி என்னும் ஊரில் நடைபெற இருக்கிறது.