அந்த நடிகை மீது கோபத்தில் இருக்கும் சமந்தா

Spread the love

அந்த நடிகை மீது கோபத்தில் இருக்கும் சமந்தா

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா, காற்று வெளியிடை, சைக்கோ படங்களில் நடித்த அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கிறார்.

அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா
அதிதி ராவ் – சமந்தா


தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்ட சமந்தா, டைரக்டர் அஜய் பூபதி இயக்கத்தில் சர்வானந்திற்கு ஜோடியாக நடிக்க

ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்திற்கு மகா சமுத்திரம் என பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின்

படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் சமந்தாவை நீக்கி விட்டு, அவருக்கு பதில் அதிதி ராவை ஒப்பந்தம்

செய்துள்ளார்கள். ஏற்கனவே இந்த படத்திற்காக அதிதி ராவிடம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் சமீபத்தில் தான்

சம்மதம் சொன்னாராம். அதனால் கடைசி நிமிடத்தில் சமந்தாவை மாற்றி விட்டு, அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதிதி ராவ் – சமந்தா

ஏற்கனவே ஜானு படத்தில் சர்வானந்துடன் நடித்துள்ளதாலும், மகா சமுத்திரம் படத்தின் கதை மிகவும்

பிடித்திருந்ததாலும் இதில் நடிக்க சமந்தா மிகுந்த ஆர்வமாக இருந்ததாகவும் அதிதிராவ் குறுக்கே புகுந்து படத்தை

கைப்பற்றியதால் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அந்த நடிகை மீது கோபத்தில்

Spread the love