திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு

திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
Spread the love

திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு

திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு நேற்று (24) தனது தாயுடன் சென்ற குழந்தையிடமிருந்து வைத்தியர் போல நடித்த ஒருவர் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அனுக்கனே கும்பகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் ஒருவர் தனது மகனின் காலில் முள்ளினால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியரைச் சந்தித்து தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொண்டார்.

மருத்துவர் போல் தோற்றமளிக்கும் குறித்த நபர் மகனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கழற்றி பையில் போடுமாறும் கூறியுள்ளார்.

இதன்போது, மருத்துவர் வேடமணிந்த நபர் குழந்தையை அழைத்துச் சென்று மருத்துவமனையில் உள்ள பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு குழந்தையின் தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்றதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .போலீஸ் விசாரணைகள் தொடர்கின்றன .

Featured

Loading...