கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை
PCR பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்கள் இருவர் நேற்று (07)
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கடற்படை வீரர்கள் இருவரும், வெலிசறை கடற்படை முகாமில் கடமை புரிந்து வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் கொவிட் -19
தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து சிகிச்சைக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண
குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 07 பேர் கொழும்பு கடற்படை பொது
வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களின் பி.சி.ஆர் சோதனைகளில் இவர்களுக்கு வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி 2020 மே 06 ஆம் திகதி
அவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் மேலும், வைத்தியசாலைகளில் இருந்து
வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு
தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நபர்கள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 கடற்படை வீரர்கள் முழுமையாக
குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.

- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு

- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது







